கார்பைடு கல் வைத்த மாம்பழத்தை கண்டுபிடிக்க டிப்ஸ்....
மாம்பழ சீசன் துவங்கியுள்ள நிலையில், சந்தையில் விற்பது 'கார்பைடு' கல்லால் பழுக்க வைத்த மாம்பழமா என தெரியாமல் பொதுமக்கள் தவிப்பில் உள்ளனர்.
கார்பைடு கல்லால் பழுக்க வைத்த மாம்பழங்களின் தோல் மஞ்சள் நிறத்திலும், உள்ளே சதைப்பகுதி வெள்ளை நிறத்திலும் இருக்கும்.
இதில் உள்ள அசிட்டிலீன் எனப்படும் வாயுவின் காரணமாக ஒரே நாளில் பழுத்த நிலையை அடையும். ஆனால், இது சாப்பிட உகந்தது அல்ல.
மேலும் வெம்பிப் பழுக்கும் நிலையைப் போன்றது. இதை சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு ஏற்படும் என்பதால் இந்த முறையில் பழுக்க வைப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது.
இப்படி பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களில் லேசான வெளிர்மஞ்சள் புள்ளிகளைக் காண முடியும்.
காம்பு பகுதியில் வெட்டிச் சாப்பிட்டு பார்த்தால் புளிப்புச் சுவையும், அதற்கான மணமும் வீசும்.