மண் வாசனைக்கு காரணம் இதுதான் !
வறண்ட நிலத்தில் மழை பெய்யும் போது ஏற்படும் ஒருவித நறுமணம் தான் 'மண் வாசனை' என அழைக்கப் படுகிறது.
இதன் அறிவியல் பெயர் 'பெட்ரிகோர்'.
1964ல் ஆஸ்திரேலியாவின் இரண்டு விஞ்ஞானிகள் இதை கண்டறிந்தனர்.
பூமியின் மேல் அடுக்குகளில் வாழும் 'ஆக்டினோமைசீட்ஸ்' பாக்டீரியாக்கள் வெளியிடும் 'ஜியோஸ்மின்' வேதிப்பொருள் தான் இதற்கு காரணம்.
மழைத்துளி மண்ணில் விழும் போது, காற்றுக்குமிழிகளை வெடிக்க செய்கிறது.
இவை 'ஜியோஸ்மின்' எனும் எண்ணெய் போன்ற வேதிப்பொருளுடன் காற்றில் கலந்து அது நம் மூக்கை அடைகிறது.