வயிற்றில் புற்றுநோய் இருப்பதை கண்டறிவது எப்படி? அறிகுறிகள் அறிவோமா!

வயிற்றுப் புற்றுநோய் என்பது இரைப்பையில் உள்ள செல்களில் கட்டுப்பாடில்லாமல் வளர்ச்சி ஏற்படுவதாகும்.

வயிற்றில் புற்றுநோய் உள்ள நோயாளிகளைத் தொடக்க நிலையில், அல்லது முற்றிய நிலையில் கண்டறியலாம்.

நெஞ்செரிச்சல், அஜீரணம், வயிற்று வலி, வாய் துர்நாற்றம் உள்ளிற்றவை ஆரம்ப அறிகுறிகள். சாப்பிட்ட பிறகு வயிறு நிரம்பியதாக அல்லது வீங்கியதாக உணரக்கூடும்.

தொடக்க நிலையில் இருக்கும் நோயாளிகள், உணவு உட்கொள்ள முடியாமல் இருக்கலாம், மற்றும் உடல் எடை குறையக்கூடும்.

ஆரம்ப கால அறிகுறிகள் பொதுவாக தெளிவற்றதாக இருக்கும், பின் அடிவயிற்றின் மேல் பகுதியில், பாதிப்பு ஏற்படலாம். உணவுப் பாதையில் அடைப்பு ஏற்படுவதால், வாந்தி ஏற்படலாம்.

முற்றிய நிலையிலான நோயாளிகளுக்கு, ரத்தக் கசிவு ஏற்படலாம். மலம் கெட்டியாகக் கறுப்பாக வெளியேறும்.

அறிகுறிகள் தென்படும் போதே மருத்துவரை அணுக வேண்டும். அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு , கீமோதெரபி, இலக்கு சிகிச்சை போன்றவை அளிக்கப்படுகின்றன.

கவனிக்காமல் விட்டுவிட்டால் புற்றுநோய், கல்லீரலில் பரவிய நிலையிலும், நோயாளிகள் காணப்படலாம். இது, அரிதாக நுரையீரல் மற்றும் மூளைக்குக் கூடப் பரவலாம்.