குழந்தைகளை தாக்கும் கோடைகால நோய்கள்

'மீசில்ஸ்' எனும் மணல் வாரியம்மை அல்லது விளையாட்டு அம்மை, சிக்கன் பாக்ஸ் எனும் முத்து மாரியம்மை என பல வகைகள் கோடையில் வைரஸ் கிருமிகளால் ஏற்படக் கூடியவை.

சரியான வயதில் தடுப்பூசிகள் போடுவதால், இவை வராமல் தவிர்க்கலாம். கோடையில் கூட்டம் அதிகமுள்ள இடங்களுக்கு, குழந்தைகளை அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும்.

வியர் குரு, வெப்பக் கட்டிகள், புண்கள் அதிகம் பாதிக்கும் என்பதால், தினமும் 2 முறை குளிக்க வைக்கவும். போதிய தண்ணீர், பழச்சாறுகள், இளநீர், மோர் போன்றவற்றை அதிகம் தரவும்.

'மெட்ராஸ் ஐ' என்ற வைரஸ் நோய் அதிகளவில் ஏற்படுகிறது. இது மட்டுமல்லாமல், கண் எரிச்சல், அரிப்பு, சிவந்து போவது போன்ற பாதிப்புகளும் ஏற்படுகின்றன.

கைகளால் கண்களை தொடுவது, கசக்குவது கூடாது. அடிக்கடி துாய நீரைக் கொண்டு கண்களை சுத்தம் செய்வது நல்லது. கண் நோய் வந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

அடிக்கடி சிறுநீர் கழித்தல், குறைந்த அளவு மஞ்சளாக போதல், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், சிறுநீர் பாதையில் வலி, அடிவயிற்று வலி போன்றவை ஏற்படும்.

இதை தவிர்க்க தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். ஓ.ஆர்.எஸ்., கரைசலை குடிக்கத் தரலாம். சிறுநீர் பரிசோதனை செய்து, கிருமித் தொற்று இருந்தால், தகுந்த சிகிச்சை எடுப்பது அவசியம்.