குழந்தை எடை அதிகரிக்க சில டிப்ஸ்!
குழந்தை எடை குறைவாக இருப்பதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று சாப்பாடு குறைவாக எடுத்துக் கொள்வது, மற்றொன்று குடலில் கீரிப்புழுக்கள் இருப்பதால் எடை கூடாது.
6 மாதத்திற்கு ஒரு முறை அரசு மருத்துவமனைகளில் கிடைக்கும் குடல் புழு நீக்க மாத்திரைகளை பயன்படுத்தலாம்.
தற்போது வெயில் காலம் துவங்கி உள்ளதால் நல்ல ஆரோக்கியமான உணவு கொடுக்க வேண்டும்.
தினமும் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.
உணவில் தயிர் சேர்க்க வேண்டும். இதனால் நல்ல பாக்டீரியாக்கள் உருவாகி பசியை துாண்டும்.
காய்கறிகள் சேர்க்க வேண்டும். வாரத்தில் இரு முறை சிக்கன், மீன், மட்டன் கொடுக்க வேண்டும்.
காலை, மாலை பசும்பால் சேர்க்க வேண்டும்.