கோடையில் ஆரோக்கியத்தை காக்கும் மூலிகைகள் சில...!

துளசி... இருமல், சளி, காய்ச்சல் மற்றும் தொற்றுகளுக்கு நிவாரணமாக இருப்பதுடன், கோடை வெப்பத்தை எதிர்த்து போராட உதவும் மூலிகையாகவும் உள்ளது.

எனவே, உடல் வெப்பத்தை தணிக்க தினமும் 4 - 5 துளசி இலைகளை மென்று சாப்பிடலாம்.

தினமும் புதினாவை உட்கொள்ளும் போது, கோடையில் உடலை புத்துணர்ச்சியாக வைக்கலாம். இது செரிமானத்துக்கு உதவுவதுடன், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

ஃபிரெஷ்ஷான புதினா இலைகளுடன் கூடிய தண்ணீரையோ அல்லது எலுமிச்சை ஜூஸில் இலைகளைச் சேர்த்தோ குடிக்க்கலாம்.

கற்றாழை ஜூஸை உட்கொள்வது செரிமான அமைப்பில் இருக்கும் நச்சுக்களை நீக்குவதோடு, கோடை வெப்பத்தை எதிர்த்து போராட உதவுகிறது.

கொத்தமல்லியானது கோடை காலத்தில் ஏற்படும் பல செரிமான பிரச்னைகளை எதிர்த்து போராட உதவுவதுடன், உடலை குளிர்ச்சியாக வைக்கும்; ஏராளமான ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் உள்ளன.

உணவில் நேரடியாக கொத்தமல்லி இலைகளை சேர்த்தோ அல்லது ஃபிரெஷ்ஷான இலைகளை கொண்டு சட்னி செய்தோ சாப்பிடலாம்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகள் நிறைந்த இஞ்சி, கோடையின் வெப்பம், சூரிய ஒளி போன்ற காரணிகளால் உண்டாகும் அழற்சிக்கு தீர்வாக இருக்கும்.