சுவைமிகுந்த காசி அல்வா ரெசிபி இதோ!

தேவையானவை: வெண்பூசணித் துருவல் - ஒரு கப், சர்க்கரை - அரை கப், நெய் - இரண்டு மேஜைக்கரண்டி.

பொடித்த முந்திரி - இரண்டு தேக்கரண்டி, புட் கலர் - ஒரு சிட்டிகை, ஏலக்காய்த்துாள் - இரண்டு சிட்டிகை.

செய்முறை: வாணலியில் நெய்விட்டு, பொடித்த முந்திரியை போட்டு பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்.

அதே வாணலியில் பூசணித்துருவலை போட்டு, அதிலுள்ள நீர் சுண்டும் வரை வதக்கவும்.

பின்னர், புட் கலர், சர்க்கரை மீதமுள்ள நெய்யை சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து கிளறவும்.

ஏலக்காய் துாள் சேர்த்து, வாணலியில் ஒட்டாமல் திரண்டு வரும் போது, இறக்கவும்.

சுவையான காசி அல்வா ரெடி. சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்பர்.