நவராத்திரி ஸ்பெஷல் எள்ளு சாதம் ரெசிபி!
தேவையானவை: அரிசி - 200 கிராம், கருப்பு எள் - நான்கு மேஜைக்கரண்டி, காய்ந்த மிளகாய் - நான்கு, நல்லெண்ணெய் - இரண்டு மேஜைக்கரண்டி
கடலை பருப்பு, உளுந்த பருப்பு - தலா ஒரு மேஜைக்கரண்டி, பெருங்காயத்துாள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு,
செய்முறை: அரிசியை களைந்து குக்கரில், ஒரு பங்கு அரிசிக்கு, இரண்டு பங்கு தண்ணீர் விட்டு வைத்து, வேக வைத்துக் கொள்ளவும்.
வெறும் வாணலியில் எள், உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து கொள்ளவும்.
வறுத்த எள், உளுத்தம் பருப்பு மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து, மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.
சாதத்தை அகலமான பாத்திரத்தில் போட்டு, பொடித்த எள், தேவையான அளவு உப்பு, பெருங்காயத்துாள் சேர்த்து எண்ணெய் விட்டு நன்றாக கலக்கவும்.
சுவையான எள்ளு சாதம் ரெடி... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர்!