உலக ஊதா தினம் இன்று !
உலகில் 6.5 கோடி பேர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 80 சதவீதம் பேர் ஏழை, நடுத்தர நாடுகளில் உள்ளனர் என உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.
இந்தியாவில் 1 முதல் 1.5 கோடி பேர் இப்பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மூளை நரம்பியல் செயல்பாடுகளில் ஏற்படும் திடீர் மாற்றம் அல்லது பாதிப்பால் வலிப்பு ஏற்படுகிறது.
ஆனால் இதுகுறித்து மக்களிடையே பொதுவான தவறான புரிதல் உள்ளது.
அல்சைமர், ஒற்றைத் தலைவலி, பக்கவாதம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக மூளை நரம்பு பிரச்னைகளால் வலிப்பு நோய் உண்டாகிறது.
இது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மார்ச் 26ல் உலக ஊதா தினம் கடைபிடிக்கப்படுகிறது.
வலிப்பு நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையாக சிகிச்சையளித்தால், அதிலிருந்து மீள முடியும் என டாக்டர்கள் கூறுகின்றனர்.