கோடை வெயிலுக்கு இதமான பானகம்
தேவையானப் பொருட்கள்: வெல்லம் - அரை கப், எலுமிச்சை பழம் - 1, சுக்குப்பொடி, ஏலக்காய் பொடி மற்றும் மிளகு பொடி - தலா கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
முதலில் வெல்லத்தை பொடியாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
பின், ஒரு பாத்திரத்தில் பொடித்த வெல்லத்தை போட்டு, ஒரு கிளாஸ் தண்ணீரை ஊற்றி, நன்றாக கரைய விட்டு, அதை வடிகட்டவும்.
வடிகட்டிய வெல்ல நீரில் சுக்கு பொடி, ஏலக்காய் பொடி, மிளகு பொடி மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
இதில், எலுமிச்சை சாற்றை சேர்க்க வேண்டும்.
எலுமிச்சை சாற்றின் சுவை பானத்தில் ஏற்றளவிற்கு தண்ணீரை கலக்கி, அதில் ஐஸ் கட்டிகளை போடவும்.
அவ்வளவு தான், குளிர்ச்சியான மற்றும் சுவையான பானகம் இப்போது ரெடி.
இதை மதிய வெயில் நேரத்தில் வீட்டுக்குள் அமர்ந்து கொண்டு குடிக்க சுவை அள்ளும்.