இன்று உலக ஆஸ்துமா தினம்
ஆஸ்துமா ஒரு சுவாசக் கோளாறு. சுவாச மண்டலத்தின் காற்றுப் பாதைகள் சுருங்குவதால் ஏற்படுகிறது.
இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மே மாதத்தின் முதல் செவ்வாய் (மே 5) உலக ஆஸ்துமா தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
'அனைத்து ஆஸ்துமா பாதித்தவர்களுக்கு, இன்ஹேலர்கள் கிடைப்பது - இன்றும் ஒரு அவசரத் தேவை' என்பது இந்தாண்டு மையக்கருத்து.
உலகில் ஆண்டுக்கு 26 கோடி பேர் ஆஸ்துமாவால் பாதிக்கப்படுகின்றனர். 4.5 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.
இதில் பெரும்பாலானவை தடுக்க முடிந்தவை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
மூச்சுத்திணறல், இருமல், நெஞ்சு இறுக்கம், மற்றும் மூச்சு இரைப்பு ஆகியன இதன் அறிகுறிகள்.
ஆஸ்துமா நோயாளிகளுக்கு உடல் ரீதியான ஆதரவு மட்டுமல்ல, மன ரீதியான ஆதரவும் தேவை. நோய்க்கான சிகிச்சை அளித்தால் பாதிப்பில் இருந்து மீளலாம்.