கொளுத்தும் வெயிலுக்கு இதமான மட்கா குல்பி

தேவையானப் பொருட்கள்: கற்கண்டு- கால் கப், பிரஷ் கிரீம் - ஒரு கப், பால் - அரை கப், குங்குமப்பூ- அரை டீஸ்பூன், தயிர்- கால் கப்.

பால் பவுடர் - கால் கப், பாதாம் - 20, முந்திரி - 15, ஏலக்காய் - 15, சோம்பு - அரை டீஸ்பூன், கசகசா - ஒரு டீஸ்பூன், ரோஜா இதழ்கள் - சிறிதளவு.

பாதாம், முந்திரி, ஏலக்காய், சோம்பு, கசகசா, ரோஜா இதழ்களை மிதமான சூட்டிலுள்ள தண்ணீரில் ஊற வைக்கவும்.

பின், மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து எடுக்கவும்.

அடுப்பை ஆன் செய்து கடாயில் பாலை ஊற்றி சுண்ட காய்ச்சியதும், அதில் குங்குமப்பூவை சேர்ந்து கலந்து கொள்ளவும்.

மிக்ஸி ஜாரில் பிரஷ் கிரீம், தயிர், கல்கண்டு, பால் சேர்த்து நன்கு அடிக்கவும்.

ஒரு பவுலில் காய்ச்சிய பால், அரைத்த விழுது, தயிர் கலவை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

அதை சிறிய பவுல்களில் ஊற்றி, அதன் மீது நறுக்கிய பாதாம், ரோஜா இதழ் சேர்த்து பிரிட்ஜில் வைத்து, சில்லென்று மாறியதும் எடுத்தால், வெயிலுக்கு இதமான மட்கா குல்பி ரெடி.

அடிக்கும் வெயிலுக்கு ஐஸ்கிரீம் கேட்கும் குட்டீஸ்களுக்கு வீட்டிலேயே இதை செய்து கொடுத்தால், உற்சாகமுடன் சாப்பிடுவர்.