ஆல் இன் ஒன் குழம்புத்தூள்.. வாங்க தயாரிக்கலாம்...!

தேவையானப் பொருட்கள்: தனியா : 1 கிலோ, சீரகம், மிளகு : தலா 100 கிராம், வெந்தயம், விரலி மஞ்சள் தலா 50 கிராம், கடலைப்பருப்பு : 2 டீஸ்பூன்.

சோம்பு : 1 டீஸ்பூன், சிவப்பு மிளகாய் : 1 1/4 கிலோ, கறிவேப்பிலை - தேவையான அளவு, உப்பு : ஒரு கைப்பிடி அளவு.

இந்த பொருட்கள் அனைத்தையும் வெயிலில் நான்கு நாட்களுக்கு நன்றாகக் காய வைத்து, மிஷினில் அரைத்துக் கொள்ளலாம்.

வெயிலில் காய வைக்க வாய்ப்பில்லாதவர்கள் அனைத்துப் பொருட்களையும் மிதமாக வறுத்து அரைத்துக் கொள்ளலாம்.

உப்பு சேர்ப்பதால் குழம்பு மிளகாய் தூள் பல நாட்களுக்கு கெடாது; பூச்சித் தாக்குதல் தவிர்க்கப்படுகிறது. வேண்டாம் என்பவர்கள் உப்பைத் தவிர்த்துக் கொள்ளலாம்.

சாம்பார், காரக்குழம்பு, புளிக்குழம்பு, காலிபிளவர், சிக்கன், மட்டன், மீன், சோயா, முட்டைக்குழம்பு, மீன் வறுவல், உருளை வறுவல் என அனைத்து சமையலுக்கும் இதைப் பயன்படுத்தலாம்.

பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படுவதால் இந்த குழம்புத்தூளின் சுவை அள்ளும்.