குட்டீஸ்களுக்கு பிடித்தமான கற்கண்டு வடை
தேவையானப் பொருட்கள்: உளுந்து - 1.5 கப், பச்சரிசி - 2 டேபிள் ஸ்பூன், கற்கண்டு - 1 கப், எண்ணெய், தண்ணீர் - தேவையான அளவு.
பச்சரிசி மற்றும் உளுந்தை தண்ணீரில், 30 நிமிடங்கள் ஊற வைத்து கெட்டியாக அரைக்கவும்.
பின், கற்கண்டை பொடியாக்கி அதனுடன் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
கடாயில் தேவையானளவு எண்ணெய் விட்டு சூடானவுடன், மாவை வடையாக தட்டி போட்டு நன்றாக வேக வைத்து எடுக்கவும்.
இப்போது சுவையான, 'கற்கண்டு வடை' ரெடி. அனைவரும் விரும்பி உண்பர். குறிப்பாக, குட்டீஸ்களுக்கு ஈவ்னிங் ஸ்நாக்ஸாக கொடுத்தால் ஆர்வமுடன் சாப்பிடுவர்.
இந்த வடையை சூடாகச் சாப்பிடுவதை விட, ஆறிய பின் சாப்பிட்டால் சுவை அள்ளும்.