மாதவிடாய் வலி இயல்பானதா?
மருத்துவரீதியில், மாதவிடாய் வலி இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. ஒன்று, மாதவிடாய் வருவதற்கு முன், வலியுடன் ஆரம்பிக்கலாம்.
முதல் இரண்டு நாளில் அந்த வலி தானாக சரியாகி விடும். மூன்றாவது நாள் வலியே இருக்காது. இது தான் இயல்பானது.
ஆனால், சிலருக்கு மாதவிடாய் ஆரம்பிக்கும் முன்பே வலி வந்து, மாதவிடாய் முடிந்த பின்னும் வலி வரலாம்.
குழந்தைப் பருவத்தில், மாதவிடாய் ஆரம்பிக்கும் போது, ஹார்மோன் செயல்பாடுகள் முழுமையாக இருக்காது.
எனவே, மாதவிடாய் வருவதில் சீரற்ற தன்மை இருக்கலாம். சில மாதங்களுக்கு ஒரு முறை மாதவிடாய் வரலாம்.
குழந்தைக்கு ரத்தசோகையை ஏற்படுத்தும் அளவுக்கு, ரத்தப்போக்கு அதிகமாக இருந்தால் மட்டும் அவசியமான சிகிச்சை பெறவேண்டும்.
மற்றபடி தேவையில்லாமல் மருந்து, மாத்திரைகள் கொடுத்து, ஹார்மோன் செயல்பாட்டை, அழுத்தத்திற்கு உட்படுத்தக் கூடாது.
இதுவே, 20 வயதிற்கு மேற்பட்ட, திருமணமான, குழந்தை பெற திட்டமிடும் பெண்களுக்கு, பிரச்னை இருந்தால், ஹார்மோன்கள் செயல்பாடுகளில் மாற்றம் இருக்கிறதா என்று பார்த்து, சிகிச்சை தர வேண்டும்.
மெனோபாஸ் வயதில் ஏற்படும் மாதவிடாய் பிரச்னைகள், மனநிலை நிலையில் மாற்றம், சிறுநீர் பிரச்னைகள், மெனோபாஸ் வயதில் இருக்கும். இவற்றை இயல்பானது என்று நினைப்பது தவறு.
பைப்ராய்டு கட்டி, எண்டோமெட்ரியோசிஸ் அல்லது கேன்சராகவும் இருக்கலாம். ஆரம்ப அறிகுறிகளின் போதே முறையாக பரிசோதனை செய்து கொண்டால், சுலபமாக சிகிச்சை செய்து, குணம் பெற முடியும்.