அஜீரணமும் இதய நோய் அறிகுறிகளில் ஒன்றா?

பொதுவாக அஜீரணம், நெஞ்செரிச்சல் ஏற்படும் போது, மாரடைப்பு என மக்கள் பதட்டம் அடைகின்றனர்.

சில நேரங்களில் மாரடைப்பு அறிகுறிகளை அஜீரணம் என புரிந்து, இறப்புவரை செல்கின்றனர். இரண்டையும் பிரித்தறிய வேண்டியது அவசியம்.

அஜீரணம் உணவுக்குப் பிறகு அல்லது இரவில் மார்பில் எரிச்சல் உணர்வு.

மேலும் படுக்கையிலோ, குனியும்போதோ அதிகரிக்கும் மார்பு வலி ஒரு அறிகுறி.

வாயில் புளிப்பு அல்லது அமிலம் போன்ற சுவையும் அஜீரணத்தின் அறிகுறி தான்.

உணவு மார்பு நடுவில் அல்லது தொண்டையில் சிக்கியிருப்பது போன்ற உணர்வு மாரடைப்பு ஏற்படும் போது வரும்.

மேலும் மார்பு வலி அல்லது சிரமம், பலவீனம், தலைச்சுற்றல், மயக்கம் ஏற்படும்.

தாடை, கழுத்து, முதுகு பகுதியில் வலி அல்லது சிரமம் இருக்கும். மேலும் ஒரு கை அல்லது இரு கைகளிலும், தோளிலும் வலி, சிரமம் ஏற்படும்.

அதேபோல் மூச்சுத்திணறல், வாந்தி உணர்வு, அதிக வியர்வை (நீரிழிவு வியர்வை போல்) காணப்படும்.