வேட்பாளர்களுக்கு டெபாசிட் திரும்ப எப்படி கிடைக்கும்?

லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்புவர்கள், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 34 1(ஏ) படி, வேட்புமனுவுடன் கட்டணம் செலுத்த வேண்டும்.

அதன்படி, ரூ. 25 ஆயிரம் (எஸ்.சி., / எஸ்.டி., வேட்பாளர்களுக்கு ரூ. 12,500) டெபாசிட் கட்டணமாக செலுத்த வேண்டும்.

அதுபோல சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் வேட்பு மனுவுடன் ரூ. 10 ஆயிரம் டெபாசிட் (எஸ்.சி., /எஸ்.டி.,க்கு ரூ. 5 ஆயிரம்) கட்டணமாக செலுத்த வேண்டும்.

இதை திரும்பப் பெற வேட்பாளர் தான் போட்டியிட்ட தொகுதியில் பதிவான மொத்த ஓட்டுகளில் ஆறில் ஒரு பங்கு வாக்கு பெற்றிருக்க வேண்டும்.

இல்லாவிட்டால், 'டெபாசிட்' தொகை இழந்ததாக அறிவிக்கப்படுவர். இதைத்தான் டெபாசிட் காலி என்பர்.

இதில் 'நோட்டா' எண்ணிக்கை கணக்கில் எடுக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.