தைராய்டு பாதிப்பால் உடலில் ஏற்படும் மாற்றங்களை எப்படி சரி செய்யலாம்?

தைராய்டு என்பது கழுத்தின் முன்பகுதியில் அமைந்துள்ள பட்டாம்பூச்சி போன்று இருக்கும் ஒரு சிறிய சுரப்பி.

இது சிறியதாக இருந்தாலும் நம் உடல் சீராக இயங்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

இது நமது வளர் சிதை மாற்றம், ஆற்றல் அளவு, இதயத் துடிப்பு, உடல் வெப்பம் மற்றும் முழுமையான வளர்ச்சியைப் பராமரிக்கத் தேவையான ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது.

இச்சுரப்பி சரியாக வேலை செய்யாவிட்டால், அதன் பாதிப்பை உடல் முழுவதும் உணர முடியும். பெண்களுக்கு வயது அதிகரிக்கும் போது தைராய்டு கோளாறுகளும் அதிகரிக்கின்றன.

15 முதல் 19 வயதுக்குட்பட்ட பெண்களிடம் 0.7 சதவீதமாக இருக்கும் பாதிப்பு, 35 முதல் 49 வயதுடையவர்களிடம் 3.4 சதவீதமாக உயர்கிறது.

35 வயதுக்கு மேல் பெண்கள் தைராய்டு பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

அயோடின், செலினியம், துத்தநாகம் நிறைந்த சத்தான உணவை உட்கொள்ளுங்கள்.

மன அழுத்தம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்; போதுமான துாக்கமும் அவசியமாகும்.