வெப்ப அலை தாக்கம்.. தற்காப்பு வழிமுறைகள் சில...
வெளியில் செல்லும் போது குடை, தொப்பி, கண்ணாடி, காலணிகள் பயன்படுத்த வேண்டும்.
மதியம் 12:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை வெளிப்புற வேலைகளை தவிர்த்தல் வேண்டும்.
பயணிக்கும் போது போதுமான குடிநீர் எடுத்து சென்று, தாகம் இல்லாவிட்டாலும் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும்.
உடலில் நீரிழப்பு ஏற்படுத்தும் ஆல்கஹால், தேநீர், காபி, கார்பனேற்றப்பட்ட பானங்களை தவிர்க்கவும்.
லஸ்ஸி, நீர்மோர், எலுமிச்சைசாறு ஆகிய நீர்ச்சத்து பானங்களை அதிகமாக எடுத்து கொள்ளலாம்.
வீட்டை குளிர்ச்சியாக வைத்து கொள்ள திரைச்சீலைகள், சன்ஷேட்கள் பயன்படுத்த வேண்டும்.
குழந்தைகள், செல்ல பிராணிகளை நிறுத்தப்பட்ட வாகனங்களின் அருகில் விட வேண்டாம்.
மேலும் வேலை நேரத்தில் யாராவது மயக்கம் அடைந்தால் உடனடியாக குளிர்ச்சியான இடத்திற்கு மாற்றி தண்ணீர், உப்பு சர்க்கரை கரைசல் கொடுக்க வேண்டும்.
வெப்ப அலை பாதிப்பு ஏற்பட்டால் அருகில் உள்ள மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும்.