பீட்ரூட்டின் ஆரோக்கிய நன்மைகள் இவை

கார்போஹைட்ரேட், புரதச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீஷியம், பொட்டாஷியம், வைட்டமின் சி, போலேட் உட்பட பல பீட்ரூட்டில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

மிகக்குறைந்த அளவு கலோரி தான் இதிலுள்ளது.

அடிக்கடி இதை சாப்பிட்டு வர, ரத்தத்தில் கழிவுகளை நீக்கி, உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடும்.

கண் பார்வை திறனை அதிகரிக்க உதவும். செரிமான கோளாறை நீக்கும்.

ரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்கச் செய்யும்.

பீட்ரூட் மற்றும் வெள்ளரிச்சாறை கலந்து சாப்பிட்டு வர, சிறுநீரகம், பித்தப்பை சுத்திகரிக்கப்படும். சிறுநீரக எரிச்சலையும் குறைக்கும்.

உடல் சோர்வு, மன அழுத்தத்தை குறைத்து, புத்துணர்ச்சியை அளிக்கும்.

பீட்ரூட் சாறுடன், தேன் கலந்தும் சாப்பிடலாம்.