நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நெல்லிக்கனி

நோய் எதிர்ப்பு சக்தி தரும் மூலிகைகளுள் நெல்லிக்கனிக்கு முக்கிய இடம் உண்டு.

தினமும், 2 விதை நீக்கிய நெல்லியை, இடித்து சாறு பிழிந்து, அதில், 25 மில்லி வெந்நீர், பொடித்த 5 மிளகு, 3 சிட்டிகை மஞ்சளுடன், 1 ஸ்பூன் தேன் கலந்து வெறும் வயிற்றில் பருகவும்.

தொடர்ந்து, 48 நாட்கள் செய்த பின் நிறுத்தவும். இதில், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

கண் பார்வைத்திறன் மேம்படும்; சருமம் பொலிவு பெறும்.

இதயம், கல்லீரல், சிறுநீரகம், மூளை போன்ற உறுப்புகளின் செயல்திறன் சிறப்பாக இருக்கும்; தூக்கமும் மேம்படும்.

மலச்சிக்கல் அறவே நீங்கும்; செரிமானம் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.

நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் 10 முதல், 20 நெல்லி வற்றலை உடைத்து, இரவில், ஒரு குவளை தண்ணீரில் போட்டு ஊற வைக்கவும்.

காலையில் அதை அப்படியே கொதிக்க வைத்து, 6 மிளகு, 1 துண்டு இஞ்சி சேர்த்து வடிகட்டி, ஆறிய பின் பருகி வர, நீரிழிவு பாதிப்பின் தன்மை குறையக்கூடும்.