செயற்கை கருத்தரிப்பின் வெற்றி வாய்ப்பை வயது பாதிக்குமா?

செயற்கை கருத்தரித்தல் என்பது கருமுட்டை, விந்தணுக்களை எடுத்து இரண்டையும் சேர்த்து வெளியே கருவை உருவாக்கி, நான்கைந்து, நாட்கள் வளர்த்து கர்ப்பப்பைக்குள் வைப்பது.

இதில், ஐ.வி.எப்., - ஐ.சி.எஸ்.ஐ., முறைகள் பின்பற்றப்படும் நிலையில், இரண்டிலும் செயல்முறைகளில் சில மாறுபாடுகள் இருக்கும்.

செயற்கை கருத்தரிப்பில் வெற்றி விகிதம் என்பது 50 முதல் 60 சதவீதமே உள்ளது.

40 வயதுக்கு மேல், இது 20-30 சதவீதமாக குறைந்துவிடும். இதற்கு தயாராகவே இச்சிகிச்சைக்கு வர வேண்டும்.

குறிப்பாக இதன் வெற்றி என்பது கருமுட்டை, விந்தணுக்களின் தரத்தை பொறுத்தே உள்ளது.

இதற்கு தயாராகும் தம்பதிகளுக்கு வாழ்வியல் மாற்றங்கள் கட்டாயம் வேண்டும்.

எடை குறைப்பு, நல்ல சரிவிகித உணவு எடுத்தல், உடற்பயிற்சி இருந்தால் மட்டுமே கருமுட்டை, விந்தணுவின் தரத்தை மேம்படுத்த முடியும்.

புகைபிடித்தல், காபி, டீ, மது போன்ற பழக்கங்கள், பெண்களுக்கு மனஅழுத்தம், துாக்கமின்மை பிரச்னைகள் இருந்தாலும் வெற்றி சதவீதத்தை கட்டாயம் பாதிக்கும்.