டியோடரண்ட், பாடி ஸ்ப்ரே, பெர்ப்யூம்... வாசமாக உலா வர எது சரியானது?
டியோடரண்ட், பாடி ஸ்ப்ரே, பெர்ப்யூம் (சென்ட்) மூன்றும் ஒரே மாதிரியான பயன் என்றாலும், ஒவ்வொன்றுக்கும் தனி வேலை உள்ளது.
சரியான முறையில் பயன்படுத்தினால், காலை முதல் மாலை வரை நம்மை நறுமணத்துடன், தன்னம்பிக்கையுடன் வைத்துக்கொள்ளும்.
டியோடரண்ட்... வியர்வை அதிகமாக வரும் நபர்கள், டியோடரண்ட் பயன்படுத்தலாம். இது வியர்வையை குறைக்காது; ஆனால் வியர்வையால் வரும் நாற்றத்தை குறைக்கும்.
குளித்தவுடனே, அக்குள் பகுதியில் மட்டும் லேசாக தடவலாம்; அல்லது ஸ்ப்ரே செய்யலாம். முழு உடலில் தேவையில்லை. உடைகளின் மீது அப்ளை செய்தால் வாசனை வரவே வராது.
பாடி ஸ்ப்ரே... 15-20 செ.மீ. தூரத்தில் வைத்து மார்பு, தோள்பட்டை, முதுகு போன்ற பகுதிகளில் லேசாக இதை ஸ்ப்ரே செய்யலாம்.
முகத்தில் அல்லது புண், கீறல் இருக்கும் இடங்களில் தவிர்க்கவும். சூரிய ஒளி நேரடியாக படும் இடங்களிலும் பயன்படுத்த வேண்டாம். சிறிதளவு ஸ்ப்ரே போதுமானது.
பெர்ப்யூம்... சிறப்பு நிகழ்ச்சிகளுக்கே இது. குளித்த பிறகு, உடல் உலர்ந்ததும், கழுத்து, மணிகட்டு போன்ற 'பல்ஸ் பாயின்ட்ஸ்' எனப்படும் இடங்களில் மட்டும் லேசாக தடவலாம்.
வாசனை நீண்ட நேரம் நிலைக்கும். இப்படி, எந்த வாசனை பொருளையும், எப்படி, எங்கே என்று அறிந்து பயன்படுத்தினால் தான், நாள் முழுவதும் பயன் கிடைக்கும்.