கோலோன் ஹைட்ரோதெரபி பற்றிய சில புரிதல்கள்...

இயற்கை மருத்துவத்தில் பெருங்குடலை சுத்தம் செய்யக்கூடிய முறைக்கு 'கோலோன் ஹைட்ரோதெரபி' என்று பெயர்.

நிலத்திற்கு நீர் பாய்ச்சுவதை போன்ற முறை என்பதால், 'கோலோன் இரிகேஷன்' என்றும் இதை சொல்லப்படுகிறது.

இயற்கை மருத்துவத்தில் 'எனிமா' கொடுக்கும் போது இரண்டரை லிட்டர் தண்ணீரை குடலுக்கு செலுத்தபடும்.

இந்த தெரபியில், பல லிட்டர் தண்ணீரை சிறிய குழாய் வாயிலாக பெருங்குடலுக்குள் செலுத்தபடுகிறது.

இந்த தண்ணீர் குடலுக்குள் சென்று மூலை முடுக்கெல்லாம் சுத்தம் செய்து, எந்தக் கழிவையும் விட்டு வைக்காமல் வெளியேற்றி விடும்.

இந்த தெரபியை சுலபமாக செய்து விட முடியும். பொதுவாக ஆரோக்கியமான உடலை நிர்வகிக்க விரும்பினால், ஆண்டிற்கு ஒரு முறை இந்த தெரபியை செய்து கொள்ளலாம்.

பல நோய்களை வரும் முன் தடுப்பதற்கு இது உதவி செய்யும் என இயற்கை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.