முந்திரி, பாதாம் ஐஸ்கிரீம்... வீட்டிலேயே ஈசியாக செய்யலாம் !

தேவையானப் பொருட்கள்: பாதாம், முந்திரி, மக்கானா, தேங்காய் பால் - தலா 1 கப், பேரீட்சம் பழம், கோகோ பவுடர் - தலா அரை கப்.

ஒரு பெரிய பவுலில் பாதாம், முந்திரி, மக்கானா ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும்.

இதனுடன் தேங்காய் பால், பேரீட்சம்பழம் மற்றும் கோ கோ பவுடரை கலக்கவும்.

இந்த கலவையை மிக்ஸி ஜாரில் போட்டு, கொஞ்சம் கொர கொரப்பாக அரைக்கவும்.

இனிப்பு சுவை அதிகமாக வேண்டுமென்றால், சிறிதளவு நாட்டு சர்க்கரையை கலந்து கொள்ளலாம்.

இறுதியாக இந்த கலவையை ஐஸ்கிரீம் மோல்டில் ஊற்றி 4 மணி நேரத்திற்கு மேல் பிரிட்ஜில் வைத்தெடுக்கவும்.

இப்போது, சுவையான, ஆரோக்கியம் நிறைந்த பாதாம் மற்றும் முந்திரி ஐஸ்கிரீம் ரெடி.