இன்று உலக ஓவிய தினம்
உலக ஓவிய தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்., 15ல் கொண்டாடப்படுகிறது.
ஓவியம் என்பது அழகியல் சார்ந்த கலை. இது நம் சிந்தனை திறனை வளர்க்கிறது.
உலக புகழ்பெற்ற ஓவியரான இத்தாலியின் லியோடர்னோ டாவின்சியின் பிறந்த தினமான ஏப்., 15 அன்று யுனெஸ்கோ சார்பில் உலக ஓவிய தினமாக கொண்டாடப்படுகிறது.
ஓவியர்களின் திறமையை அங்கீகரிப்பது, படைப்பாற்றல் திறனை வெளிக்கொண்டு வருவதை இத்தினம் வலியுறுத்துகிறது.
இது ஒரு சிறந்த பொழுதுபோக்கு அம்சமாகவும் பார்க்கப்படுகிறது.
குழந்தைப்பருவத்தில் இருந்து ஓவியத்திறனை வளர்க்க வேண்டும் என இத்தினம் ஊக்குவிக்கிறது.