sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/தங்கம் வென்றார் ஷிவா * ஜூனியர் உலக துப்பாக்கிசுடுதலில்

தங்கம் வென்றார் ஷிவா * ஜூனியர் உலக துப்பாக்கிசுடுதலில்

தங்கம் வென்றார் ஷிவா * ஜூனியர் உலக துப்பாக்கிசுடுதலில்


ADDED : ஏப் 21, 2026 11:14 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 21, 2026 11:14 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கெய்ரோ: எகிப்தின் கெய்ரோவில் ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கிசுடுதல் (ரைபிள்/பிஸ்டல்/ஷாட் கன்) நடக்கிறது. ஆண்களுக்கான 10 மீ., ஏர் ரைபிள் பிரிவு போட்டி நடந்தது. தகுதிச்சுற்றில் இந்தியாவின் ஷிவா நார்வல், 576 புள்ளி எடுத்து முதலிடம் பிடித்து, பைனலுக்கு முன்னேறினார். மற்ற இந்திய வீரர்கள் அபினவ், சிராக் சர்மா 3, 4வது இடம் பெற்று பைனலில் நுழைந்தனர்.

அடுத்து நடந்த பைனலில் அசத்திய ஷிவா, 241.8 புள்ளி எடுத்து தங்கப்பதக்கம் கைப்பற்றினார். உஸ்பெகிஸ்தானின் அப்துல்லாயேவ் (240.0) வெள்ளி வென்றார். இந்திய வீரர் சிராக் சர்மாவுக்கு (218.9) வெண்கலம் கிடைத்தது. அபினவ் (136.7) 7வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

பெண்களுக்கான 10 மீ., ஏர் ரைபிள் பிரிவு போட்டி நடந்தது. இந்தியாவின் பானா புக்ரா, பைனலில் 250.6 புள்ளி எடுத்து, வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார். தகுதிச்சுற்றில் முதலிடம் பிடித்த இந்தியாவின் ஷாம்பவி, பைனலில் 7வது இடம் (206.5) பெற்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us