sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ எல்.டி.சி., தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு அழைப்பு

எல்.டி.சி., தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு அழைப்பு

எல்.டி.சி., தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு அழைப்பு


ADDED : மே 09, 2026 06:30 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 09, 2026 06:30 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: எல்.டி.சி., தேர்வுக்கான, இலவச சிறப்பு பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயனடையுமாறு, எஸ்.சி., – எஸ்.டி., மாணவர்களுக்கு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையம் அழைப்பு விடுத்துள்ளது.

புதுச்சேரி துணை பிராந்திய வேலைவாய்ப்பு அதிகாரி ரபீந்திரநாத் மோண்டல் செய்திக்குறிப்பு;

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையம், புதுச்சேரி மாநிலத்தில் எஸ்.சி., – எஸ்.டி., வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு, எல்.டி.சி., பணியில் சேர எழுத்துத் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நாளை (11ம் தேதி) முதல் சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. அனைத்து வார நாட்களிலும், சிறப்பு வகுப்புகள் காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை நடைபெறும்.

இந்த சிறப்பு பயிற்சி வகுப்பில் அனைத்து பாடங்களிலும் சிறந்த அனுபவமிக்க ஆசிரியர்களைக் கொண்டு, வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளது. இந்த இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயில விருப்பமுள்ள மாணவர்கள், எண்: 5, முதல் தளம் மூன்றாவது குறுக்குத்தெரு, நடேசன் நகர், புதுச்சேரி – 605005, தொலைபேசி எண்: 0413 2200115, 8870073622, 9629342446 என்ற முகவரியில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையத்தை நேரில் அணுகி தங்களது பெயர்களை முன்பதிவு செய்து, இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us