மலைகோட்டை கோயில்
திருச்சியின்
மிக முக்கிய சுற்றுலா தலமாக
மலைக்கோட்டை கோயில்
விளங்குகிறது. மலை மீது ஏறி
செல்லும் வழியில்
தாயுமானசுவாமி கோயில் உள்ளது.
இந்த கோயிலில் நூற்று கால்
மண்டபம் உள்ளது. கோயிலின்
விமானம் தங்கத்தால்
வேயப்பட்டுள்ளது.
மலைகோட்டையின் தெற்கு
பக்கத்தில் பல்லவர்கள்
காலத்தில் உருவாக்கப்பட்ட குகை
கோயில்கள் உள்ளன. |
 |
ஸ்ரீரங்கநாதசுவாமி கோயில்
புகழ் பெற்ற
வைணவ தலமான ஸ்ரீரங்கம் ஸ்ரீ
ரங்கநாதசுவாமி கோயில் திருச்சி
நகரில் இருந்து 6 கி.மீ.
தொலைவில் அமைந்துள்ளது.
ஸ்ரீ ரங்கம் கோயில் விமானமானது
திருப்பாற்கடலின்று தோன்றியது.
இதை நெடுங்காலமாக பூசித்து
வந்த பிரம்மதேவன்
திருவரங்கநாதருக்கு நித்திய
பூசை புரிந்து வரும்படிசூரியனை
நியமித்தார். சூரிய குலத்தின்
வழித்தோன்றலான இராமபிரான்
அயோத்தியில் வழிபட்டு
வருகிறார். தனது முடிசூட்டு
விழாவினைக் காண வந்த
விபீஷணனுக்கு தான் பூஜித்து
வந்த இவ்விமானத்தை
அளித்தார். |
 |
அதை இலங்கைக்கு
எடுத்து செல்லும் வழியில்
விபீஷணன் காவிரி ஆற்றங்கரையில்
வைத்து ஓய்வெடுத்து விட்டு
திரும்ப எடுக்கும் போது தரையை
விட்டு வரவில்லை. அது கண்டு
கலங்கிய விபீஷணனை அப்பகுதி
மன்னன் தர்மவர்மன் ஆறுதல்
கூறினான்.அரங்கநாதரும்
காவிரிக்கரையிலேயே
தங்கியிருக்க வேண்டும் என்பதே
தமது விருப்பம்
என்றார்.விபீஷணனைத் தேற்றும்
பொருட்டு அவர் தாம் விபீஷணன்
இருக்கும் தென்திசை இலங்கை
நோக்கி பள்ளிகொண்டருள்வதாக
உறுதி அளித்தார்.பின்னர்
தர்மவர்ம சோழனும் இவ்விடத்தில்
கோயில் கட்டி
வழிபட்டான்.அக்கோயில்
காலப்போக்கில்
வெள்ளப்பெருக்கில் மண்ணில்
மறைந்து போக தர்ம சோழ மரபில்
வந்த கிள்ளி வளவன் இக்கோயிøல்
சிறப்புற அமைத்து வழிபட்டதாக
வரலாறு கூறுகிறது.
கோயிலின் வடக்கு பகுதி தென்னை
மரங்களால் சூழப்பட்டுள்ளது.
இந்த கோயில் காவிரி நதியின்
நடுவே 2.5 சதுர கி.மீ
பரப்பளவில் அமைந்துள்ளது.
உலகின் பிரம்மாண்டமான
கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.
கோயிலில் 7 சுற்று
பிரகாரங்களும், 21
கோபுரங்களும் உள்ளன. இந்த
கோயிலின் உயரமான கோபுரம்
1987ம் ஆண்டு
கட்டிமுடிக்கப்பட்டது. இதன்
உயரம் 73 மீட்டர் ஆகும்.
மேலும் இந்த கோயிலின்
ராஜகோபுரம் இந்தியாவிலேயே மிக
பெரியதாகும். ஸ்ரீரங்கம்,
திருச்சி நகருடன் பாலம் மூலம்
இணைக்கப்பட்டுள்ளது. ரங்கநாதர்
சந்நதி மட்டுமல்லாமல் பல்வேறு
கடவுள்களின் சந்நதிகளும் இந்த
கோயிலில் உள்ளது.
முக்கிய திருவிழாக்கள்
வைகுண்ட ஏகாதசி - மார்கழி
மாதம்
அக்டோபர் மாதத்தின் இறுதியில்
ஒரு தென்னை மரத்தின்
அடித்தண்டினை
அவ்விழாவுக்குரிய பந்தலின்
முதற்கம்பாக நடுவதிலிருந்து
தொடங்கும்.பகல்பத்து ராப்பத்து
எனும் இத்திருவிழா நாட்கள்
முழுவதிலும் சுவாமியின்
திருமுன்னிலையில் நாலாயிரத்த
திவ்ய பிரபந்தப் பாடல்கள்
முழுவதும் ஓதவும் பாடவும்
பெறும். பிரம்மாண்டமான இந்த
திருவிழாவில் 5 லட்சம்
பக்தர்கள் திரண்டு பெருமாளை
வணங்குவர்
அதோடு இத்தலத்தில் நடக்கும் 3
பிரம்மோற்சவ விழாக்களிலும்
(10 நாட்கள்) லட்சக் கணக்கான
பக்தர்கள் திரள்வர்.
மாசி மாச தெப்பத்திருவிழா -
10 நாள் விழாவிலும்
ஆயிரக்கணக்கான பக்தர்கள்
திரண்டு கோயில் விழாக் கோலம்
பூண்டிருக்கும்.
தவிர மாதந்தோறும் இக்கோயிலில்
திருவிழாக்கள் நடந்த வண்ணம்
இருக்கும். தமிழ் ஆங்கில வருட
பிறப்பின் போதும் வாரத்தின்
சனிக்கிழமைகளிலும் கோயிலில்
பெருமளவு பக்தர்கள் வருகை
இருக்கும்
தொலைபேசி - 0431-2432246