image
image

பிற தகவல்கள்

 

 மருத்துவ மனைகள்
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை, தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனை ஒன்று, 24 மணி நேர மருத்துவமனைகள் 29, கண் வங்கிகள் நான்கு, ரத்த வங்கிகள் ஆறு, எய்ட்ஸ் உதவி மையம் இரண்டு.

தொழில்கள்:

இரும்பாலை, பர்ன் ஸ்டாண்டர்டு தொழிற்சாலை, டால்மியா மேக்னசைட் தொழிற்சாலை, கல் மாவு தொழிற்சாலை, சேகோ தொழில், வெள்ளி கொலுசு உற்பத்தி, பட்டு நெசவு தொழில், கைத்தறி நெசவு தொழில், லாரி தொழில், வெல்லம் உற்பத்தி.

மொழிகள்:

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, குஜராத்தி, சவுராஷ்டிரா, மலையாளம், உருது.

போக்குவரத்து வசதிகள்:

சேலம் மத்திய பஸ் ஸ்டாண்ட், சேலம் டவுன் பஸ் ஸ்டாண்ட், சேலம் ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷன், சேலம் டவுன் ரயில்வே ஸ்டேஷன், செவ்வாய்பேட்டை மார்க்கெட் ரயில்வே ஸ்டேஷன், காமலாபுரம் விமான நிலையம்.

முக்கிய தேசிய நெடுஞ்சாலைகள்:

காசி- கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை, சேலம்- கொச்சி தேசிய நெடுஞ்சாலை, சேலம்- உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலை.

முக்கிய அரசு அலுவலகங்கள்:

பட்டு வளர்ச்சித்துறை ஆணையர் (தலைமை) அலுவலகம், சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், வானிலை ஆராய்ச்சி கூடம், இரும்பாலை ஆவின் பால் பண்ணை, மாவட்ட மைய நூலகம், பெத்தநாயக்கன் பாளையம் மரவள்ளி ஆராய்ச்சி மையம், சேகோ சர்வ் அலுவலகம், கருப்பூர் இண்டியன் ஆயில் கார்ப்பரேஷன் காஸ் பாட்லிங் பிளான்ட், சேலம் சரக டி.ஐ.ஜி., அலுவலகம், சேலம் மத்திய சிறை, அரசு அருங்காட்சியகம்.

விவசாய பயிர்கள்:

மாம்பழம், மஞ்சள், நெல், கரும்பு, வாழை, பருத்தி, மரவள்ளி கிழங்கு, நிலக்கடலை, தேங்காய், காஃபி, பாக்கு, வெற்றிலை, கோலியஸ் கிழங்கு.

புகழ்பெற்ற திருவிழாக்கள்:

மாரியம்மன் கோயில் ஆடிப்பண்டிகை பண்டிகை, வண்டி வேடிக்கை திருவிழா, மயான கொள்ளை திருவிழா, வைகாசி விசாக திருவிழா, ஆருத்ரா தரிசனம், ரேக்ளா ரேஸ், சவுடேஸ்வரி அம்மன் கோயில் பண்டிகை.

சரித்திர புகழ் வாய்ந்த இடங்கள்:

சேலம் கலெக்டர் அலுவலகம், நாட்டாண்மை கழக கட்டிடம், பொய்மான் கரடு, போஸ் மைதானம், மாடர்ன் தியேட்டர்ஸ், கல்லறை தோட்டம்,

மாநகர போலீஸ் ஸ்டேஷன்கள்:

சேலம் சரக டி.ஐ.ஜி., அலுவலகம், போலீஸ் கமிஷனர் அலுவலகம் ஒன்று. துணை கமிஷனர் அலுவலகம் இரண்டு. உதவி கமிஷனர் அலுவலகம் ஒன்பது. மகளிர் போலீஸ் ஸ்டேஷன் மூன்று. போலீஸ் ஸ்டேஷன்கள் 11.

ரயில்வே ஸ்டேஷன்கள்:

சேலம் ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷன், சேலம் டவுன் ரயில்வே ஸ்டேஷன், சேலம் செவ்வாய்பேட்டை மார்க்கெட் ஸ்டேஷன்.

சட்டசபை, லோக்சபா தொகுதிகள்:

சேலம் மாநகராட்சி பகுதிகள் சேலம்- 1 சட்ட சபை தொகுதி முழுமையாகவும், சேலம்-2, வீரபாண்டி, பனமரத்துப்பட்டி ஆகிய சட்டசபை தொகுதிகளில் பாதியளவும் இடம்பெற்றுள்ளன. சேலம் மாநகராட்சியின் அனைத்து பகுதிகளும் சேலம் லோக்சபா தொகுதியில் முழுமையாக இடம்பெற்றுள்ளன.

ஆதரவற்றோர் இல்லங்கள்:

அய்யந்திருமாளிகை அரசு ஆதரவற்றோர் இல்லம், நேசக்கரங்கள், தொன்பாஸ்கோ அன்பு இல்லம், ஒய்.டபிள்யு.சி.ஏ., ஒய்.எம்.சி.ஏ., லைஃப்லைன் டிரஸ்ட், வேல்டு விஷன் இந்தியா.

* முக்கிய வங்கி கிளைகள்- 39.
* தியேட்டர் எண்ணிக்கை- 21.


image
image
image