கோவை
நகரில் மக்கள் பார்க்க
வேண்டிய இடங்களில் பேரூர்
பட்டீஸ்வரர் கோயில்
முக்கியமானதாகும். இந்த
கோயில் நகரில் இருந்து 10
கி.மீ., தூரத்தில்
அமைந்துள்ளது.
மருதமலை:
கோவைக்கு
வடமேற்கே மேற்கு தொடர்ச்சி
மலையில் மருதமலை முருகன்
கோயில் அமைந்துள்ளது.
தரைப்பகுதியில் இருந்து
599 அடி உயரத்தில்
அமைந்துள்ள மருதமலை
முருகன் கோயில் மிக
பிரசித்தி பெற்றது.
கோவை குற்றாலம்:
மேற்கு
தொடர்ச்சி மலையில்
பெய்யும் நீர் அனைத்தும்
ஒன்று சேர்ந்து சிறுவாணி
மலை அடிவாரத்தில்
அருவியாக கொட்டுகிறது.
பச்சை பசேல் என்ற
மரங்களின் நடுவே
குளிர்ந்த நீராக கொட்டும்
இதை கோவை குற்றாலம் என
அழைக்கின்றனர். இந்த இடம்
கோவை நகரில் இருந்து 24
கி.மீ., தூரத்தில் உள்ளது.
வைதேகி நீர்வீழ்ச்சி:
கோவை
குற்றாலம் போன்றே இதுவும்
மேற்கு தொடர்ச்சி மலையில்
அமைந்துள்ளது. காஞ்சிமாநதி
என அழைக்கப்பட்ட இந்த
இடத்தில் "வைதேகி
காத்திருந்தாள்' படம்
எடுக்கப்பட்டது. அதன்
பிறகு இதை வைதேகி
நீர்வீழ்ச்சி என அழைக்க
துவங்கிவிட்டனர்.
சிறுவாணி அணை:
கோவை நகர
மக்களுக்காக நரசிம்மலு
நாயுடு என்பவர் 1889ம்
ஆண்டு சிறுவாணி திட்டத்தை
அளித்தார். பின்னர்
1922ம் ஆண்டு
பரிசீலிக்கப்பட்டு 1930
ம் ஆண்டு
நிறைவேற்றப்பட்டது. கோவை
நகர மக்களின் முக்கிய
குடிநீர் தேவையை சிறுவாணி
நீர்தான் தீர்த்து
வைக்கிறது. உலகில்
இரண்டாவது மிக சுவையான
குடிநீர் என சிறுவாணி நீர்
புகழப்படுகிறது.
வனத்துறையின் அனுமதி
பெற்று இந்த அணைக்கு
செல்லலாம்.