 |
விவேகானந்தர் பாறை
கன்னியாகுமரியில் கடல்
நடுவில் உள்ள ஒரு பாறையில்
சுவாமி விவேகானந்தர்
நினைவு மண்டபமும், மற்றொரு
பாறையில் 133 அடி உயர
திருவள்ளுவர் சிலையும்
உள்ளது. இங்கு படகில்
செல்ல வேண்டும்.
|
அலைகள்
நிறைந்த கன்னியாகுமரி
கடலில் பயணம் செய்வது ஒரு
த்ரில் அனுபவம் ஆகும்.
தமிழ்நாடு அரசின்
பூம்புகார்
போக்குவரத்துக்கழகம் இந்த
படகு சர்வீசை நடத்துகிறது.
லாட்ஜ்களில் ரூ.200 முதல்
ரூ.ஆயிரம் வரையிலான
கட்டணத்தில் அறைகள் உள்ளது.
படகு கட்டணம் - ரூ.20,
விவேகானந்தர் மண்டப நுழைவு
கட்டணம் - ரூ.10
பள்ளி மாணவர்கள் அத்தாட்சி
கடிதத்துடன் வந்தால் படகு
கட்டணம் பத்து ரூபாயும்,
மண்டப நுழைவு கட்டணம்
ஐந்து ரூபாய் மட்டுமே.
மண்டபத்திலுள்ள தியான
அறையில் சற்று நேரம்
அமர்ந்தால் மனஅமைதி
கிடைக்கும். மண்டபத்தில்
விவேகானந்தர்,
ராமகிருஷ்ணர் தொடர்பான
பயனுள்ள புத்தகங்கள்
கிடைக்கும்.
 |
காந்தி மண்டபம்
முக்கடல் சங்கமிக்கும்
புண்ணிய தீர்த்தம் அருகே
இந்த மண்டபம்
கட்டப்பட்டுள்ளது.
காந்தியின் அஸ்தி கலசம்
வைக்கப்பட்ட இடம் இந்த
மண்டபத்தின் அருகே உள்ளது.
இந்த இடத்தில் ஆண்டுதோறும்
அக்டோபர் இரண்டாம் தேதி
சூரிய ஒளி விழும். இங்கு
பயணிகள் செல்ல கட்டணம்
எதுவும் கிடையாது.
செசருப்பு பாதுகாக்க
மட்டும் 50 பைசா கட்டணம்.
|
காந்தி மண்டபம் அருகே
காமராஜர் மணி மண்டபம்
உள்ளது. கன்னியாகுமரியில்
சிப்பியால் செய்யப்பட்ட
அலங்கார சாமான்கள் விசேஷம்.
ரூ.10 முதல் ரூ.500 வரை
கிடைக்கும். இங்குள்ள
சங்கிலி மண்டபத்தில்
பயணிகள் பாதுகாப்பாக
குளிக்கலாம். இந்த
இடத்தில் முன்னோர்களுக்கு
தர்ப்பணமும் செசய்யலாம்.
குமரியிலுள்ள பகவதி அம்மன்
கோயில் மிகவும் விசேஷமானது.
இதன் கிழக்கு வாசசல்
அடைக்கப்பட்டு, வடக்கு
வாசல் திறந்திருக்கும்.
அம்பிகையின் மூக்குத்தி
ஒளி கண்ணைப் பறிக்கும்.
 |
பத்மனாபபுரம் அரண்மனை
கன்னியாகுமரியில் இருந்து
நாகர்கோவில் வழியாக
திருவனந்தபுரம் செல்லும்
வழியில் தக்கலை அருகே 350
ஆண்டுகள் பழமை வாய்ந்த
இந்த அரண்மனை அமைந்துள்ளது.
திருவிதாங்கூர் மன்னர்கள்
கட்டிய இந்த அரண்மனை
முழுக்க முழுக்க மரத்தால்
செய்யப்பட்டதாகும்.
|
பழங்கால மன்னர் மற்றும்
வாழ்க்கை முறையை படம்
பிடித்து காட்டும் வகையில்
இந்த அரண்மனை அமைந்துள்ளது.
இங்கு நுழைவு கட்டணமாக
பெரியவர்களுக்கு ரூ. 50
கட்டணம் ஐந்து முதல் 12
வயதுக்கு
உட்பட்டவர்களுக்கு ரூ.10
வசூலிக்கப்படுகிறது.
தக்கலையில் ரூ.150 முதல்
வாடகை உள்ள லாட்ஜ்கள்
உள்ளன.
 |
மாத்தூர் தொட்டிப்பாலம்
திற்பரப்பில் இருந்து
திருவட்டார் வந்த பின்னர்
மாத்தூர் என்ற
கிராமத்துக்கு செல்லும்
ரோட்டில் தொட்டிப்பாலம்
உள்ளது. ஆற்றுக்கு மேல்,
கால்வாய் விவசாயத்துக்கு
தண்ணீர் கொண்டு செல்லும்
கால்வாய் இதிலுள்ளது
விசேஷ அம்சம்.
|
ஆசியாவிலேயே இரண்டாவது
நீள பாலம். அடிக்கடி
சினிமா படப்பிடிப்பு
நடக்கிறது.
1240 அடி
நீளமும், 103 அடி உயரமும்
கொண்ட இந்த பாலம் 29
பில்லர்களை தாங்கி
நிற்கிறது. இதன் மீது
நின்று பார்த்தால்
கண்ணுக்கு எட்டிய தூரம்
வரை பச்சை பசேலென காட்சி
தரும். கட்டணம் கிடையாது.
இங்கு தங்கும் வசதி
இல்லை. அருகிலுள்ள
மார்த்தாண்டத்தில்
தங்குவதற்கு லாட்ஜ்கள்
உள்ளன. மேலும், 18 அடி
உயரமுடைய அனுமான் மற்றும்
பெண் விநாயகர் சிற்பம்
கொண்ட சுசீந்திரம்
தாணுமாலய சுவாமி கோயில்,
பாம்பை மூலவராகக் கொண்ட
நாகர்கோவில் நாகராஜா
கோயில், மண்டைக்காடு
பகவதி அம்மன் கோயில்
ஆகியவை பிரசித்தி பெற்ற
இடங்கள் ஆகும்.
 |
திற்பரப்பு அருவி
பத்மனாபபுரத்தில் இருந்து
20 கிலோ மீட்டர்
தூரத்தில் திற்பரப்பு
அருவி உள்ளது. கோடை
காலத்திலும் சிறிதாவது
தண்ணீர் கொட்டுவது இதன்
சிறப்பம்சமாகும். இங்கு
சிறுவர்கள் குளிக்க
வசசதியாக சிறிய நீச்சல்
குளம் கட்டப்பட்டுள்ளது.
|
இயற்கையான சூழ்நிலையில்
இந்த அருவி அமைந்துள்ளது.
நுழைவு கட்டணம் ரூ.2.
வீடியோ கேமரா கட்டணமாக
ரூ.75-ம், போட்டோ கேமரா
கட்டணமாக ரூ.5-ம்
வசூலிக்கப்படுகிறது.
இங்குள்ள லாட்ஜ்களில்
ரூ.150 முதல் ரூ.300 வரை
வாடகை வசூலிக்கப்படுறது.