திண்டுக்கல் மாவட்டத்தின் வரலாறு அங்குள்ள கோட்டையை சுற்றி அமைந்துள்ளது. 17 மற்றும் 18ம் நூற்றாண்டுகளில் திண்டுக்கல் கோட்டை மராட்டியர்கள் மற்றும் ஹைதர் அலியின் படைகளமாக விளங்கியது. 1767, 1783, 1790 வருடங்களில் 3 முறை ஆங்கிலேயர்கள் இந்த கோட்டையை கைப்பற்றினர். பின்னர் ஹைதர் அலியிடம் கோட்டையை ஆங்கிலேயர்கள் திருப்பி தந்தனர். இங்கு முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மக்களின் தொகை அதிகமாகவே இருந்தது.
அமைப்பு : கடல் மட்டத்தில் இருந்து 268மீ உயரத்தில் அமைந்துள்ளது.
மக்கள் தொகை :
2001ம் ஆண்டு மக்கள் தொகை
கணக்கெடுப்பின் படி
196619 ஆகும். ஆண்களும்
பெண்களும் சம விகிதத்தில்
உள்ளனர். கல்வியறிவு
பெற்றவர்கள் 79 சதவீதம்
ஆகும். கல்வியறிவு பெற்ற
ஆண்கள் - 84%, பெண்கள் -
74%.