ஆரம்பத்தில் மதராஸ்
பட்டணம், மதராஸ் என்று
அழைக்கப்பட்ட இந்த பகுதி
தற்போது சென்னை என்று
அழைக்கப்படுகிறது. தற்போது
இந்தியாவின் 4வது
மெட்ரோபாலிடன் நகராக இது
விளங்குகிறது.
தமிழ்நாட்டின் தலைநகரமாக
திகழும் சென்னை, ஒரு
மாவட்டமாகவும் இருக்கிறது.
பல்வேறு மொழிகளைப் பேசும்
நவீன காஸ்மோபாலிடன் நகராக
சென்னை விளங்குகிறது. பரந்த
மணற்பரப்புடன் கூடிய கடற்களை,
பூங்காக்கள் மற்றும் பல்வேறு
வரலாற்று சின்னங்களை
உள்ளடக்கியதாக சென்னை
விளங்குகிறது. சென்னை நகர
மக்கள், இசை, நடனம் மற்றும்
இதர தென் இந்திய கலைகளில்
நாட்டம் உள்ளவர்கள்.
தமிழகத்தின் தலைநகராக
விளங்கும் சென்னையில் 2006ம்
ஆண்டு மக்கள் தொகை
கணக்கெடுப்பின்படி 6 கோடியே
96 லட்சமாக உள்ளது. திராவிட
நாகரிகத்தின் உறைவிடமாக
திகழும் சென்னை, தென் இந்திய
கட்டிட வேலைப்பாடு, இசை, நடனம்,
நாடகம் மற்றும் இதர கலைகளின்
ஊற்றாகவும் காட்சி அளிக்கிறது.
மிகப்பெரிய வர்த்தக,
தொழிற்துறை நகரமாகவும் சென்னை
விளங்குகிறது. இந்தியாவின்
வாகன உற்பத்தி தொழிற்சாலைகளில்
பெரும்பாலானவை, இந்திய வாகன
உற்பத்தி தலைநகராக விளங்கும்
சென்னையில்தான் உள்ளன.
சென்னையில் உள்ள 12
கிலோமீட்டர் நீள மெரினா
கடற்கரை உலகின் நீளமான
கடற்கரைகளில் ஒன்றாக
திகழ்கிறது. புதுமையும்
பழமையும் கலந்த நகராக இது
இருக்கிறது. 200 சதுர கிலோ
மீட்டர் பரப்புள்ள இந்த நகரம்
மேலும் விரிவடைந்து வருகிறது.
சென்னைக்கு செல்லும் வழி:
இந்தியாவில் உள்ள அனைத்து
முக்கிய நகரங்கள் மற்றும்
பெரிய சர்வதேச
நகரங்களிலிருந்து சென்னைக்கு
விமான சர்வீஸ் உள்ளது.
இந்தியன், ஜெட் ஏர்வேஸ், சகாரா
ஏர்லயன்ஸ், ஸ்பைஸ் ஜெட்,
கிங்பிஷர் போன்ற உள்நாட்டு
விமான நிறுவனங்கள் சென்னைக்கு
விமானங்களை இயக்குகின்றன.
உள்நாட்டு விமான நிலையம்
சென்னை நகரின்
மையப்பகுதியிலிருந்து 20 கி.மீ.,
தொலைவில் மீனம்பாக்கத்தில்
அமைந்துள்ளது.
இந்தியாவில் உள்ள அனைத்து
பெரிய நகரங்கள் மற்றும்
தமிழகத்தின் அனைத்து
நகரங்களிலிருந்து சென்னைக்கு
சாலை வசதி உள்ளது. சென்னை பஸ்
நிலையமான கோயம்பேடு பஸ்
நிலையம் ஆசியாவிலேயே பெரிய பஸ்
நிலையமாக கருதப்படுகிறது.
கோயம்பேடு ஜவகர்லால் நேரு
சாலையில் இது அமைந்துள்ளது.
சென்னையில் சென்னை சென்டரல்,
எழும்பூர் என இரண்டு ரயில்
நிலையங்கள் உள்ளன. இந்தியாவின்
முக்கிய நகரங்களுக்கும்
தமிழகத்தின் அனைத்து
நகரங்களுக்கும் இந்த இரு ரயில்
நிலையங்களிலிருந்து ரயில்
சர்வீஸ் உள்ளது.
சென்னையிலிருந்து அந்தமான்
நிகோபார் தீவுகளில் உள்ள
போர்ட் பிளேருக்கு கப்பல்
போக்குவரத்து இயங்கி வருகிறது.
செனனை நகரில் அரசு நகர பஸ்கள்
இயங்குகின்றன. சுற்றுலா
மற்றும் இதர தேவைக்கு
வாடகைக்கார்களும் கிடைக்கும்.
விமான நிலையத்திலும் ரயில்
நிலையங்களிலும் முன்கூட்டியே
கட்டணம் செலுத்தி பயணம்
செய்யத்தக்க டாக்சிகள்
கிடைக்கும். அதி விரைவு
உள்ளூர் ரயில் போக்குவரத்தும்
உள்ளது.