பின்னர்
கோயில் திருவிழாக்களில் கிராமத்து
இளைஞர்கள் சாகசங்கள் நிகழ்த்தி வந்தனர்.
தமிழகத்தில் பிறந்த சிலம்பக் கலை
ஆந்திராவில் கர்ர ஜகடம் ( கரடியாட்டம்),
கர்நாடகாவில் தண்டி, கேரளாவில் களரி
எனவும் வடமாநிலங்களில் லாத்தி, லகடி
எனவும் அழைக்கப்படுகிறது. கம்பை
சுழற்றினால் நம்மை தாக்க வரும்
எதிரிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும்.
கல், கத்தி, அரிவாளால் தாக்க வந்தால்
கம்பால் தடுக்க முடியும்.
உடலில் அனைத்து தசைகளும் வேலை
செய்யும். இதனால் முன்பு இளைஞர்கள்
நல்ல உடல் கட்டுடன் இருந்தனர்.
துப்பாக்கி, வெடிகுண்டு என நவீன
வளர்ச்சியால் மெல்ல மெல்ல பாரம்பரிய
தற்காப்புக் கலைகளுக்கு மவுசு
குறைந்தது. இடையில் சினிமா சண்டைக்
காட்சிகளில் சிலம்பத்திற்கு
முக்கியத்தும் தரப்பட்டது. இளைஞர்கள்
குங்பூ, கராத்தே கற்பதில் ஆர்வம்
காட்டினர். சிறு பின்னடைவிற்கு பின்
தற்போது சிலம்பக்கலைக்கு புத்துயிர்
கொடுக்கும் பணி ஆங்காங்கே
சத்தமில்லாமல்
நடந்துகொண்டுதானிருக்கிறது.
மதுரை மாவட்ட சிலம்பாட்டக் கழக பொதுச்
செயலாளர் அப்பணசாமி (51) கூறுகையில்,"
நான் இளம் வயதில் 4 ஆசிரியர்களிடம் தலா
3 மாதம் வீதம் சிலம்பம் கற்றேன்.
அப்போது சிலம்ப ஆசிரியர்களுக்கு
சம்பளம் கிடையாது. சாப்பாட்டுக்கு
மட்டுமே கொடுப்போம். அவர்கள் இதையே
முழுநேர தொழிலாக கொண்டிருந்தனர்.
சிலம்பத்தில் அய்யங்கால் வரிசை,
குறவஞ்சி, துளுக்கானம், பனையேறி மல்லு
ஆகிய "ஸ்டெப்'கள் உள்ளன. தற்போது
சிலம்பத்தில் சுருள்வாள்,
சூரியக்கூத்து, உரிசெயின் போன்ற
பல்வேறு சாகச கலைகளை புகுத்தியுள்ளோம்.
மதுரை ரோட்டரி லஹரி பள்ளி, சேதுபதி
பள்ளி,வீரபாஞ்சான் லட்சுமி பள்ளிகளில்
மாணவ- மாணவியருக்கு சிலம்ப பயிற்சி
அளித்து வருகிறேன். மூங்கில், பிரம்பு
வகைகுச்சிகளை சிலம்பத்திற்கு
பயன்படுத்துவது நல்லது' என்றார்.
எவ்வளவுதான் மாற்றங்கள் வந்தாலும்
சிலம்பக் கலைக்கு இன்னும் மவுசு
உள்ளதையே இது காட்டுகிறது. பள்ளி,
கல்லூரி மாணவர்களிடையே இக்கலையை பரப்ப
அரசு மனது வைத்தால் நல்லது.
--- டாக்டர்
ஜெ.ஜெயவெங்கடேஷ், மதுரை