இதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து அம்மை, அக்கி,
மஞ்சள்காமாலை போன்ற தொற்றுநோய்கள் ஆரம்பிக்கின்றன.
இவ்வாறு தோன்றும் கிருமித்தொற்றை தடுத்து நோய்
எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தவே பொங்கலன்று
கரும்பை உட்கொள்கிறோம். கரும்புச்சாறு உடல்உஷ்ணத்தை
தணிப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும்
அதிகப்படுத்துகிறது. கரும்பை மென்று சாப்பிடுவதால்
ஈறுகளுக்கு தேவையான சக்தி கிடைப்பதுடன் ஈறுகள்
பலப்படுகின்றன.பொங்கலன்று இறைவனை வணங்க மஞ்சள்
கிழங்கு பயன்படுகிறது.பூஜையில் வைக்கப்படும் மஞ்சள்
கிழங்கானது நீண்டநாட்கள் பூஜை அறையிலோ, வீட்டு
வாசலிலோ இருப்பதால் கிருமிநாசினியான மஞ்சளிலிருந்த
கிளம்பும் நறுமணம் வீட்டில் காற்றை சுத்தம்
செய்வதுடன் நுண்கிருமிகளை நுழையவிடாமல் தடுக்கிறது.
போகியன்று வீட்டை சுத்தம் செய்யும்போது ஒவ்வொருவர்
வீட்டிலும் தங்கியிருந்த பூச்சிகள் வெளியேறி வீட்டை
சுத்தம் செய்யாத பிறர் வீட்டிலோ அல்லது ஏற்கனவே
சுத்தம் செய்த வீட்டிலோ தஞ்சம் தேடி ஓடிவிடும்.
இதைத் தவிர்க்கவே பொங்கல் பூ என்று சொல்லப்படும்
கூரைப்பூ, மாவிலை, வேப்பிலை, ஆவாரம்பூ ஆகியவற்றை
ஒரே கொத்தாகக் கட்டி கூரையில் சொருகி வைப்பதுண்டு.
மனிதர்கள் மட்டுமே கொண்டாடுவது பொங்கல்
பண்டிகையல்ல. மனிதர்களுக்கு மாடாக உழைக்கும் ஆடு,
மாடு மற்றும் விலங்குகளையும் குளிப்பாட்டிசுத்தம்
செய்து மஞ்சள் கரைத்த நீரை அதன் மேல் தெளித்து
கிருமிநீக்கம் செய்து மாட்டுப்பொங்கலாகவும்
கொண்டாடுகிறோம். ஆகவே பொங்கல் என்பது மனிதநேயப்
பொங்கலாக கொண்டாடப்படுகிறது.