வால்பாறையில் குளு… குளு… சீசன் நிலவும் நிலையில், அந்தி சாயும் நேரத்தில் பசுமையான தேயிலை செடிகளை தாலாட்டி, ஆதவன் மறையும் அற்புதமான காட்சி. இடம்: மாணிக்கா எஸ்டேட், வால்பாறை.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது.
தென்மேற்கு பருவமழை துவங்கிய நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இடம்: கலெக்டர் அலுவலக வளாகம், திருநெல்வேலி.