Home இதை எனது முதல் பக்கமாக்கு | வணக்கம்...வணக்கம்... யூ.எஸ்.ஏ தினமலர் வாசகரே ..! Get FontSite Map |


தினமலர்
நிலக்கோட்டை சந்தையில் தீ விபத்து: 250 கடைகள் நாசம்
More Picture  |   ஆகஸ்ட் 08,2008,01:43   IST
நிலக்கோட்டை: நிலக்கோட்டை தினசரி சந்தையில் இரவு நடந்த தீ விபத்தில் 250 கடைகள் எரிந்து நாசமானது.திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முக்கிய சந்தைகளில் நிலக்கோட்டை தினசரி சந்தையம் ஒன்று. இங்கு பூ மார்க்கெட், காய்கறி, இறைச்சி என அனைத்து வகையான கடைகளும் உள்ளன. இரவு 10.45 மணிக்கு சந்தையின் மேற்கு பகுதியில் உள்ள காய்கறி கடைப்பகுதியில் இருந்து தீ பற்றி எரியத் துவங்கியுள்ளது. இரவு நேரமாக இருந்தால் தீ மளமளவென பரவியது. இதில் 250 கடைகள் எரிந்து நாசமானது. நிலக்கோட்டையில் உள்ள தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். வத்தலக்குண்டில் உள்ள தீயணைப்பு வண்டி பழுதாக இருந்ததால், திண்டுக்கல்லில் இருந்து தீயணைப்பு வண்டிகள் வந்து தீயை அணைத்தன.
இஸ்ரேலில் விமான விபத்து : 3 பேர் பலி
ஆகஸ்ட் 08,2008,01:04   IST
ஜெருசலேம் : இஸ்ரேலின் துறைமுக நகரமான ஹைபாவில் சிறிய ரக விமானம் ஒன்று எதிர்பாராத விதமாக விமான நிலையம் அருகே உள்ள வீட்டின் மீது மோதியதில் விமானத்தில் இருந்த 3 பேர் பலியாயினர். பலர் படுகாயமடைந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
புழல் சிறையில் தொடர்கிறது இடமாற்றம்
ஆகஸ்ட் 08,2008,00:17   IST
சென்னை: லஞ்சம் வாங்குவது, பயங்கரவாதிகளுக்கு உதவியது தொடர்பாக மேலும் நான்கு புழல் சிறை ஜெயிலர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புழல் சிறையில் சதி திட்டம் தீட்டிய பயங்கரவாதி அலி அப்துல்லாவிடம் இரண்டு ஏர்டெல் மொபைல் போன் சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து சிறைத்துறை அதிகாரிகள் புழல் சிறையில் அதிரடி சோதனை நடத்தினர். இதில், பயங்கரவாதிகள் மற்றும் கைதிகளுக்கு கஞ்சா போன்ற பொருட்களை சப்ளை செய்ய உதவியாக இருந்த 20 சிறை ஊழியர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். கைதிகள் சொகுசாக இருக்க வசதி செய்து கொடுப்பதாக கூறி லஞ்சம் வாங்கிய வார்டன் சாலமன் நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், பயங்கரவாதிகளுக்கு உதவியது தொடர்பாக மேலும் நான்கு சிறை அதிகாரிகள் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டனர். ஜெயிலராக பணியாற்றிய சேகர் சேலத்துக்கும், மாணிக்கம் புதுக்கோட்டைக்கும், ஜெயராமன் நாகர் கோவில் கிளை சிறைக்கும், துணை ஜெயிலர் ராமமூர்த்தி திருவாவடுதுறை கிளைச் சிறைக்கும் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.
தி.மு.க., உறவு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிரடி முடிவு
ஆகஸ்ட் 07,2008,23:12   IST
புதுக்கோட்டை : காங்கிரஸ் - தி.மு.க., உடனான உறவு நீடிக்குமேயானால், செப்டம்பர் மாதத்தில் இருந்து தி.மு.க., உடனான தங்களது கட்சியின் உறவை துண்டித்துக் கொள்ள போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வரதராஜன் தெரிவித்துள்ளார்.
துபாய்க்கு தினசரி விமான சேவை துவக்குகிறது ஜெட் ஏர்வேஸ்
ஆகஸ்ட் 07,2008,23:07   IST
புதுடில்லி : ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி முதல் துபாய்க்கு தினசரி விமான சேவை துவக்கப்படவிருப்பதாக ஜெட் ஏர்வேஸ் தலைமை நிர்வாகி தெரிவித்துள்ளார். தாங்கள் இந்த சேவையை துவக்குவதில் மகிழ்ச்சியடைவதாகவும், துபாய் செல்ல 8 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், போகவர என்றால் 14, 495 ரூபாய் வசூலிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்
ஈரோடு தலைமை மின் பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை
ஆகஸ்ட் 07,2008,22:02   IST
ஈரோடு : ஈரோடு மின் வாரியத்தில் தலைமை பொறியாளராக இருப்பவர் நடேசன். இவர் அண்மையில் தன் மகளுக்கு திருமணத்தை சிறப்பாக நடத்தினார் . திருமணத்திற்கு துணை பொறியாளர்கள் உட்பட அந்த வாரியத்தில் அனைவரும் கட்டாய நன்கொடை தர வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனையடுத்து துணை பொறியாளர்கள் போலீசாரிடம் புகார் செய்தனர். இந்நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கடந்த மாதம் நடேசனது வீட்டில் அதிரடிச் சோதனை நடத்தினர் . இந்த சோதனையில் 2 கோடிக்கும் மேற்பட்ட கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து இந்த விவகாரத்தை போலீசார் கோர்ட்டிற்கு கொண்டு சென்றனர். மேலும் அவரது வீட்டில் சோதனை செய்ய வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புப் போலீசார் தரப்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு கோர்ட் அனுமதி அளித்ததின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஏ.டி.எஸ்.பி. கிரிமுருகன் தலைமையில் அவரது வீட்டில் அதிரடிச் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 1 கோடி ரூபாய் மதிப்பிலான பணம், 3 கிலோ தங்க கட்டிகள் மேலும் பல கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவைகள் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யாவில் குண்டுவெடிப்பு : 2 பேர் பலி
ஆகஸ்ட் 07,2008,21:02   IST
மாஸ்கோ : ரஷ்யாவின் தெற்குப்பகுதியில் உள்ள சோஷி நகரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 2 பேர் பலியாயினர். இந்த நகரில் தான் 2014ம் ஆண்டில் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தில் 8 வயது சிறுமி உட்பட 13 பேர் படுகாயமடைந்துள்ளனர். குண்டுவெடிப்பு குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இலங்கை மீனவர்கள் 12 பேர் கைது
ஆகஸ்ட் 07,2008,20:27   IST
தூத்துக்குடி: கன்னியாகுமரி அருகே, இந்திய கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களின் இரண்டு படகுகள், 500 கிலோ மீன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்திய கடலோர காவல்படை கப்பல் சாகரில் கமாண்டண்ட் ஸ்ரீமன் நாராயணா தலைமையில், வீரர்கள் கன்னியாகுமரி கடல் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு இருவேறு இடங்களில் அத்துமீறி நுழைந்து, மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் 12 பேரை கைது செய்தனர். அவர்களின் இரண்டு விசைப்படகுகள், 500 கிலோ மீன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கைதான இலங்கை மீனவர்களின் பெயர், விவரம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் தூத்துக்குடி அழைத்துவரப்படுகின்றனர்.
பி.எஸ்.ஜி., கல்வி நிறுவனத்தை பல்கலையாக உயர்த்த எதிர்ப்பு : மாணவர்கள்-போலீசார் இடையே மோதல்
ஆகஸ்ட் 07,2008,19:08   IST
கோவை: பி.எஸ்.ஜி., கல்வி நிறுவனங்களை, பல்கலையாக தரம் உயர்த்த எதிர்ப்பு தெரிவித்த கல்லூரி மாணவர்கள்-போலீசார் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், 11 சட்டக் கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஆசிய சாலஞ்சர் கோப்பை கால்பந்து: பைனலுக்கு முன்னேறியது இந்தியா
ஆகஸ்ட் 07,2008,18:57   IST
ஐதராபாத்: ஆசிய சாலஞ்சர் கோப்பை கால்பந்து தொடரின் முதல் அரையிறுதியில் இந்தியா, மியான்மரை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது. எட்டு அணிகள் பங்கேற்கும் ஆசிய சாலஞ்சர் கோப்பை கால்பந்து தொடர் ஐதராபாத்தில் நடக்கிறது. இத்தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணி 2010 ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கு நேரடியாக தகுதிபெறும் என்பதால், அனைத்து அணிகளும் கடுமையாக போராடி வருகின்றன. லீக் சுற்றில் சிறப்பாக விளையாடிய இந்தியா, தஜிகிஸ்தான், வட கொரியா மற்றும் மியான்மர் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. இன்று நடந்த முதல் அரையிறுதியில் "ஏ' பிரிவில் முதலிடம் பிடித்த இந்திய அணி, "பி' பிரிவில் இரண்டாவது இடம் பெற்ற மியான்மரை எதிர்கொண்டது. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முடியாமல் திணற, 0-0 என சமநிலையில் இருந்தது. பின்னர் இரண்டாவது பாதியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் சுனில் சேத்திரி, 82வது நிமிடத்தில் கோல் அடித்து 1-0 என முன்னிலை பெறச் செய்தார். ஆட்ட நேர முடிவில் இந்தியா, மியான்மரை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது.
முஷாரப்பிற்கு எதிராக குற்றப்பத்திரிகை : சர்தாரி-ஷெரீப் முடிவு
ஆகஸ்ட் 07,2008,18:25   IST
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் அதிபர் முஷாரப்பிற்கு எதிராக குற்றப்பத்திரிகையை வெளியிட்டது சர்தாரி-ஷெரீப் தலைமையிலான கூட்டணி அரசு. இதுகுறித்து இஸ்லாமாபாத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த சர்தாரி மற்றும் ஷெரீப் கூறியதாவது : முஷாரப்பின் கொள்கைகள் நாட்டை சீரழிக்கும் வகையில் உள்ளதாகவும், அவரை அதிபர் பதவியில் இருந்து நீக்குவது தற்போது நாட்டிற்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்று என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அதிபர் முஷாரப்பால் பதவி நீக்கப்பட்ட நீதிபதிகள் அனைவரும் மீண்டும் பணியமர்த்தப்படுவர் என்று தெரிவித்துள்ளனர்.
12.01 சதவீதத்தை எட்டியது பணவீக்கம்
ஆகஸ்ட் 07,2008,18:16   IST
புதுடில்லி : பணவீக்கம் வரலாறு காணாத அளவிற்கு 12.01 புள்ளியாக உள்ளது. ஜூலை 26ம் தேதி முடிய உள்ள வாரத்தில் இந்த நிலையை எட்டியதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பொருளாதார வல்லுநர்களுடன் மத்திய திட்டக்குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா சந்தித்துப் பேசினார் .சந்திப்பின் முடிவில் பணவீக்கம் விரைவில் ஒற்றை இலக்கத்திற்கு வரும் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒலிம்பிக் ஆண்கள் கால்பந்து: அமெரிக்கா, பிரேசில், இத்தாலிக்கு முதல் வெற்றி
ஆகஸ்ட் 07,2008,17:19   IST
பீஜிங்: பீஜிங் ஒலிம்பிக் ஆண்கள் கால்பந்து தொடரின் முதல் போட்டியில் அமெரிக்கா, பிரேசில், இத்தாலி அணிகள் வெற்றிபெற்று முதல் வெற்றியை பதிவு செய்தன. சீன தலைநகர் பீஜிங்கில் 29வது ஒலிம்பிக் போட்டி நாளை(08-08-08) முறைப்படி துவங்குகிறது. இதற்கு முன்னதாக ஆண்கள் கால்பந்து லீக் போட்டிகள் இன்று துவங்கின. இதில் பிரேசில், இத்தாலி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 16 அணிகள் ""ஏ', ""பி', ""சி', ""டி' என நான்கு பிரிவுகளாக பங்கேற்கின்றன. ""ஏ' பிரிவில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணி, செர்பியாவை சந்தித்தது. அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து 1-1 என ""டிரா' செய்தன. ""பி' பிரிவில் நடந்த போட்டியில் அமெரிக்கா அணி, ஜப்பானை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது. ""சி' பிரிவில் நடந்த முதல் போட்டியில் பிரேசில் அணி, பெல்ஜியத்தை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது. ""டி' பிரிவில் நடந்த போட்டியில் இத்தாலி அணி, ஹோண்டுரஸ் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இன்றைய போட்டியில் அமெரிக்கா, பிரேசில், இத்தாலி அணிகள் வெற்றி பெற்று முதல் வெற்றியை பதிவு செய்து தங்கள் பிரிவு புள்ளி பட்டியலில் முதல் இடம் பிடித்தன.
பாகிஸ்தான் அதிபர் முஷாரப்பின் சீன பயணம் மீண்டும் ரத்து
ஆகஸ்ட் 07,2008,16:49   IST
இஸ்லாமாபாத் : ஆகஸ்ட் 11ம் தேதி பாகிஸ்தான் அதிபர் முஷாரப் மீது அந்நாட்டு பார்லிமென்ட்டில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்ற ஆளும் கூட்டணி கட்சிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அவர் தனது சீன பயணத்தை மீண்டும் ரத்து செய்துள்ளார். முஷாரப் மீது கண்டனத் தீர்மானம் கொண்டு வந்தால், ராணுவம் மற்றும் அவருக்கு ஆதரவாக இருக்கும் அமெரிக்காவின் எதிர்ப்பை சந்திக்க நேரிடும் என்பதால், இதற்கு சர்தாரி தயக்கம் காட்டுகிறார். இருப்பினும், கண்டனத் தீர்மானத்தை நிறைவேற்ற, கூட்டணி அரசில் போதுமான பலம் இருக்கிறது. மேலும், கண்டன தீர்மானத்தை ஆதரிக்க கொள்கை அடிப்படையில் சர்தாரி ஒப்புக் கொண்டுள்ளார். அதற்கு முன்னதாக, முஷாரப், தானாக முன் வந்து பதவியை ராஜினாமா செய்வதற்கு வாய்ப்பளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதை முஷாரப் ஏற்காவிட்டால் மட்டுமே, கண்டனத் தீர்மானம் குறித்து முடிவு செய்யப்பட உள்ளது. இதனால், முஷாரப், தனது சீன பயணத்தை முதலில் ரத்து செய்திருந்தார். பின்னர் தனது முடிவை மாற்றி பீஜிங் ஒலிம்பிக் துவக்க விழாவில் கலந்து கொள்ள முடிவு செய்திருந்தார். தற்போது ஆகஸ்ட் 11ம் தேதி அவர் மீது கண்டன தீர்மானம் நிறைவேற்றப் போவதாக ஆளும் கூட்டணி அரசு அறிவித்துள்ளதால் அவர் தனது பயணத்தை மீண்டும் ரத்து செய்துள்ளார்.
பீஜிங் ஒலிம்பிக்கில் முதல் தங்கம் யாருக்கு?
ஆகஸ்ட் 07,2008,16:27   IST
பீஜிங் : பீஜிங் ஒலிம்பிக்கில் முதல் தங்கம் பெறப்போவது யார் என்பது தான் சீனாவில் நடக்கும் சூடான பெட்டிங். பீஜிங்கில் நாளை ஒலிம்பிக் போட்டிகள் துவங்க உள்ளது. இந்நிலையில் விளையாட்டு போட்டிகளை வைத்து பெட்டிங் நடத்துவது அதிகரித்துள்ளது. இவற்றில் பலர் முறைகேடாக பெட்டிங் நடத்தி வருகின்றனர். தற்போதைய பெட்டிங், ஒலிம்பிக்கில் முதல் தங்கத்தை வெல்ல போவது யார் என்பதாகும். இதற்கான விடையை அளிப்பவர்கள் அதிர்ஷ்டம் இருந்தால் ஏறக்குறைய 3 கோடி ரூபாயை பரிசாக வெல்லலாம்.
அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா பதவி நீக்கம்
More Picture  |   ஆகஸ்ட் 07,2008,15:51   IST
சென்னை: ஆள்கடத்தல் குற்றத்திற்கு ஆளான அமைச்சர் என்.கே.கே.பி . ராஜா பதவியில் இருந்து நீக்கப் பட்டுள்ளார். கைத்தறி அமைச்சர் ராஜா மீது, நிலத்தினை அபகரிக்க பழனிசாமி என்பவரின் குடும்பத்தை கடத்தியதாக ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. இந்நிலையில் பழனிசாமி, தனது மகனை ராஜா கடத்தி வைத்து இருப்பதாக மாநில மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளித்து இருந்தார். இந்நிலையில் முதல்வர் ஆலோசனையின் பேரில் கவர்னர், என்.கே.கே. ராஜாவை பதவி நீக்கம் செய்யதார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்னை - சேலம் இடையே விரைவு ரயில் அறிமுகம்
ஆகஸ்ட் 07,2008,15:08   IST
சென்னை: சென்‌னை - சேலம் இடையே விரைவு புதிய விரைவு ரயில் சேவையை இணையமைச்சர் ஆர். வேலு நாளை தொடங்கி வைக்க உள்ளார். சென்னை எழும்பூரில் இரவு 11.20 மணிக்கு புறப்படும் ரயில், அடுத்த நாள் காலை 5.45 மணிக்கு சேலம் சென்றடையும், இதுதவிர சேலத்தில் இரவு 9.40மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4 மணிக்கு எழும்பூர் சென்றடையும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. விழுப்புரம், ஆத்தூர், வாழப்பாடி,மேல்மருவத்தூர் உள்ளிட்ட 11 இடங்களில் இந்த ரயில்கள் நின்று செல்லும். இது போல சென்னை - கோவை இடையேயும் இன்று முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப் படுகின்றன.
கிரிக்கெட்: ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு
ஆகஸ்ட் 07,2008,14:59   IST
மும்பை: இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் அடுத்த மாதம் பாகிஸ்தானில் நடக்க உள்ள சாம்பியன்ஸ் டிராபிக்கான(மினி உலககோப்பை) இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மூன்று டெஸ்ட் மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இவ்விறு அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் நாளை கொழும்புவில் துவங்குகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் 18ம் தேதி துவங்குகிறது. இதற்கான இந்திய வீரர்கள் தேர்வு மும்பையில் நடந்தது. ஒருநாள் போட்டிக்கான அணியின் காயம் காரணமாக கடந்த வங்கதேச தொடர் மற்றுī