Home இதை எனது முதல் பக்கமாக்கு | வணக்கம்...வணக்கம்... யூ.எஸ்.ஏ தினமலர் வாசகரே ..! Get FontSite Map |

தினமலர்

08.ஆண்களுக்கு பிறந்த குழந்தை ( செ.ஆகாஷ்)



ஆணுக்கும், பெண்ணுக்கும் குழந்தை பிறப்பது உலக இயல்பு. ஆனால், இந்த உலகத்திலேயே மிக அதிசயமாக இரண்டு ஆண்களுக்கு பிறந்த குழந்தை என்றால் அவர் "தர்மசாஸ்தா' மட்டுமே. அதனால்தான் அவரை "ஆரியபுத்திரன்' என்று அழைக்கிறோம். "ஆரியன்' என்றால், "மிகப் பெரியவன்' எனப்பொருள்.

சிவபெருமானுக்கு பிறந்த விநாயகரை குழந்தையாக பாவித்து "பிள்ளை' என்கிறோம். இந்த பதத்திற்கு மரியாதை தெரிவிக்கும்விதமாக "யார்' என்பதை சேர்த்து அவர், "பிள்ளையார்' ஆனார். முருகப்பெருமானைக் குழந்தையாக பாவித்து "குமரன்' என்கிறோம். ஆனால், அவருக்கு பிறந்த ஐயப்பன் மட்டும் "ஆரியர்' என்று அழைக்கப்படுகிறார். கிராமப்புறங் களில் அவரை "அய்யனார்' என சொல்கிறார்கள். இதன் காரணமாகத் தான் கேரளாவில் இவரது பெயராலேயே "ஆரியங்காவு' என்ற ஸ்தலமே உருவானது. இந்தியாவிலுள்ள வேறு எந்த தெய்வத்திற்கும் ஆரியன் என்ற பெயர் இல்லை. எனவே, இவர் மிகவும் உயர்ந்த தெய்வமாக கருதப்படுகிறார்.


இவர் உயர்ந்தவராக கருதப்படுவதற்கும் ஒரு காரணம் உண்டு. பரமேஸ்வரனுக்கும், விஷ்ணுவுக்கும் பிறந்த குழந்தை என்றால் உயர்ந்தவராகத்தான் இருக்க முடியும். ஏனெனில், சிவபெருமான் ஞான வடிவமாக இருக்கிறார். மகாவிஷ்ணு உலகத்தை பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றிருக்கிறார்.

சிவபெருமானின் உருவ அமைப்பை பார்த்தால் அவர் ஒரு மரத்தின்கீழ் குரு வடிவமான தெட்சிணாமூர்த்தியாக இருக்கிறார் அல்லது பனி மலையின் கீழ் ஜடாமுடி தரித்து யானைத்தோலை போர்த்தி, புலித்தோலை இடுப்பில கட்டி உடலெங்கும் விபூதி பூசி, கரத்தில் ஞான முத்திரை தாங்கியிருக்கிறார். தியா னத்தில் ஆழ்ந்திருக்கும் அவரது கோலம் சாந்தமாக இருக்கிறது. அவரே பரமசத்தியமாக இருக்கிறார். இதுபோன்ற கோலத்தை ஞானிகளே தரிப்பார்கள். எனவே அவரை, "ஞான நாயகன்' எனலாம்.


மகாவிஷ்ணுவோ பட்டு பீதாம்பரம் தரித்து, கிரீட குண்டலங்கள் சூட்டி மிகப்பெரிய ராஜாவிற்குரிய அலங்காரத்துடன், செல்வத்திற்கு அதிபதியாக மகாலட்சுமியை மார்பில் தரித்து, அலங்கார ரூபனாக காட்சி தருகிறார். எனவேதான் விஷ்ணுவை "அலங்காரப்பிரியர்' என்றும், சிவனை, "அபிஷேகப்பிரியர்' என்றும் சொல்வார்கள்.

சிவலிங்கத்தின் மீது ஒரு பாத்திரத்தைக் கட்டி துளையிட்டு அதன்மீது தண்ணீர் வடிவது போல பல கோயில்களில் செய்திருப்பார்கள். இதற்கு, "தாராபிஷேகம்' என்று பெயர். ஐயப்பன், இவர்கள் இருவருக்கும் பிறந்ததால் ஞானரூபனாகவும், உலகை காப்பவராகவும் திகழ்கிறார்.

சாஸ்தா என்ற சொல்லை தமிழில், "சாத்தன்' என்று சொல்கிறோம். நமது கிராமத்து மக்கள் பங்குனி உத்திரத்தன்று சாத்தன் கோயிலுக்கு செல்வதாக சொல்வார்கள். "சாத்து' என்றால் "கூட்டம்' என்று அர்த்தம். சாஸ்தா பெரும்பாலும் ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்திலோ, காடுகளிலோதான் குடியிருப்பார். எனவே, ஊர்மக்கள் ஒன்று

கூடிதான் அந்த இடத்திற்கு செல்ல முடியும். கூட்டமாக வந்து வணங்கும் தெய்வம் என்பதால் அவருக்கு, "சாத்தன்' என்ற பெயர் ஏற்பட்டது.

அவரை கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் சிறப்பு தரிசனம் செய்வதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. அவர் மலை உச்சியில் இருக்கிறார். இந்த இடங்களுக்கு செல்ல வேண்டுமானால் குளிர்ந்த தட்பவெப்பம் இருக்க வேண்டும். தன்

னுடைய பக்தனின் உடல் வெயிலில் நோகக்கூடாது என்பதில் அவர் அக்கறை கொண் டுள்ளார். இதன் காரணமாகவே, இந்த மாதங்கள் அவரது வழிபாட்டிற்கு தேர்ந்தெடுக்கப்பட காரணமானது. வரும் கார்த்திகை மாதம் சபரிமலை உள்ளிட்ட சாஸ்தா தலங்களுக்குச் சென்று, உயர்ந்த தெய்வமான அவரை வழிபட்டு, உயர்ந்த எண்ணங்களுடன் திரும்புவோம்!

படம்: எல்.பாலசந்தர்

 
 
BACK NEXT

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font        |   மின்னஞ்சல்   |  | 

முதல் பக்கம்
வாசகர் கடிதம் International Edition Font Help ? Advertisment Tariff

Dinamalar Publications
Copyright 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division,Dinamalar  
coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in