| |
| |
விஜய் மீது த்ரிஷா கோபம்?
|
 |
|
|
| |
 |
|
நடிகர் விஜய் மீது நடிகை த்ரிஷா கோபத்தில் இருக்கிறாராம். சென்னையில் சமீபத்தில் நடந்த குருவி பட 150வது நாள் வெற்றி விழாவில் அதன் நாயகி த்ரிஷா,
கடைசி நிமிடம் வரை கலந்து கொள்ளும் முடிவில் இல்லையாம். தனக்கு நெருக்கமான மீடியாக் காரர்களிடம் இவ்விழாவில் நான் கலந்து கொள்ளப் போவதில்லை என்று சொல்லிக் கொண்டிருந்த த்ரிஷா, தயாரிப்பு தரப்பின் நிர்பந்தத்தால் கடைசியாக வந்து சேர்ந்தார். விழா மேடையில் விஜய்யும், த்ரிஷாவும் அருகருகே நின்று கொண்டிருந்தாலும், இருவரும் சின்னதாக புன்சிரிப்பு கூட இல்லாமல் முகத்தை திருப்பிக் கொண்டிருந்தனர். வில்லு விஜய் சமீபகாலமாக நயன்தாராவுக்கு தரும் முக்கியத்துவம் த்ரிஷாவுக்கு பிடிக்கவில்லை என்பதுதான் இந்த கோபத்துக்கு காரணமாம்.
|
|
| |
|
|
|
|
| |
| |
விஜயசாந்தி ரூட்டில் சினேகா |
 |
|
|
| |
 |
|
அவ்வப்போது நம் நடிகைகளுக்கு கிளம்பும் அடிதடி அதிரடி வியாதி தற்போது சினேகாவையும் வியாபித்திருக்கிறது.
விஜயசாந்தி நடித்து தமிழிலும், தெலுங்கிலும் சக்கை போடு போட்ட வைஜெயந்தி ஐ.பி.எஸ். படத்தினை ரீமேக் செய்யவிருப்பதை கேள்விப்பட்ட சினேகா, அந்த படத்தில் எப்படியாவது விஜயசாந்தி நடித்த கேரக்டரில் நடித்து விட வேண்டும் என்று துடியாய் துடித்தார். ஒரு வழியாக அந்த வாய்ப்பையும் எட்டிப் பிடித்து விட்டார். இந்த படம் ஜெயித்து விட்டால்... இனி சினேகாவை அடிதடி அதிரடியாகத்தான் பார்க்க முடியுமாம். மொழி பிருத்வி ராஜின் அண்ணன் இந்திரஜித் ஹீரோவாக நடிக்கும் ரீமேக் வைஜெயந்தி ஐ.பி.எஸ். படத்தை டைரக்டர் ஆர்.தி.குமார் இயக்குகிறார்.
|
|
| |
|
|
| |
| |
நடிகைகளுக்காக பணம் கட்டிய தயாரிப்பு நிறுவனம் |
 |
|
|
| |
 |
|
இயற்கை, ஈ படங்களை இயக்கிய டைரக்டர் ஜனநாதன் ஜெயம் ரவி நடிக்கும் பேராண்மை படத்தை இயக்கி வருகிறார்.
படத்தில் தனிஷ்கா, சரன்யா, வசுந்தரா, லியாஸ்ரீ, வர்ஷா ஆகிய 5 புதுமுக நடிகைகள் அறிமுகமாகிறார்கள். இந்த 5 நடிகைகளும் நடிகர் சங்கத்தில் உறுப்பினர் ஆவதற்கான தொகையை செலுத்தாமல் இருந்தனர். இவர்களுக்காக படத்தை தயாரிக்கும் ஐங்கரன் நிறுவனம் ஒருவருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்தை நடிகர் சங்கத்திடம் கட்டியுள்ளது. இதனால் புதுமுக நடிகைகள் சந்தோஷத்தில் இருக்கிறார்கள். கடைசியில் இதுதான் நடிகைகளின் சம்பளம் என்று கை விரிக்காமல் இருந்தால் சரிதான்.
|
|
| |
|
|
|
|
| |
| |
மணிரத்னத்துக்கு நோ சொன்ன நடிகை |
 |
|
|
| |
 |
|
உலக அழகி முதல் உள்ளூர் அழகி வரை நடிக்கத் துடிக்கும் மணிரத்னம் படத்துக்கும் ஒரு நடிகை நோ சொல்லியிருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா?
அந்த நடிகை தாம்தூம் படத்தில் ஜெயம் ரவியின் கிராமத்து காதலியாக நடித்த கங்கானா ரனாவத் தான். அம்மணியை மணிரத்னம் இயக்கும் புதிய படமொன்றில் பிருத்விராஜ் ஜோடியாக நடிக்க தேதி கேட்டார்கள். ஆனால் கங்கானாவோ, பேராண்மை படத்தில் பிஸியாக இருப்பதால் மணிரத்னம் படத்துக்கு கால்ஷீட் கொடுக்க முடியவில்லை. இப்போது மணிரத்னத்தின் புதிய படத்தில் நடிப்பதற்கு வேறு நாயகியை தேடி வருகிறார்கள்.
|
|
| |
|
|
| |
| |
நிஜ ஹீரோ கடவுள்தான் : பேரரசு |
 |
|
|
| |
 |
|
தன் படங்களுக்கு திருப்பதி, பழனி, திருவண்ணாமலை, திருத்தணி என்று ஆன்மீக பெயர்களையே சூட்டி வரும் டைரக்டர் பேரரசு, நிஜ ஹீரோ கடவுள்தான் என்று கூறியுள்ளார்.
பக்கா ஆன்மிகவாதியான பேரரசு, பொது இடங்ங்களுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் வரும்போது, ஓம் என்ற மந்திர எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட டாலர் செயினுடனும், நெற்றியில் விபூதி பட்டை, குங்குமம் சகிதமாகவும் வருகிறார். அவரது காரின் நிறம் கூற ஆதிபராசக்தி அம்மனுக்கு பிடித்த சிவப்பு நிறம்தான். சினிமா கதையில் ஹீரோக்களை கடவுளாக காட்டினாலும், நிஜத்தில் கடவுள்தானே ஹீரோ என்று கேட்கிறார், ஆன்மிக இயக்குனர் பேரரசு.
|
|
| |
|
|
|
|
| |
| |
கவர்ச்சிக்கு நோ சொல்கிறார் நிக்கோல் |
 |
|
|
| |
 |
|
அடடா என்ன அழகு படத்தில் நடித்து வருபவர் நடிகை நிக்கோல். இவரது அப்பா இசையமைப்பாளர் தேவாவின் இசைக்குழுவில் கீபோர்டு வாசித்துக் கொண்டிருக்கிறார். சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்த நிக்கோல் அடடா என்ன அழகு நடிக்க ஒப்பந்தமானார்.
அந்த படத்தில் நிக்கோல் படுகவச்சியான டூ பீஸ் உடைகளில் நடித்தார். இந்த டூ பீஸ் ஸ்டில்களை பார்த்ததும் பல தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் அம்மணிக்கு தூது விட்டுள்ளனர். அனைத்துமே கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் வந்த விண்ணப்பங்கள்தானாம். ஆனால் இனிமேல் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று தடாலடியாக நிக்கோல் சொல்லி விட்டாராம். அடடா என்ன அழகு படம் ரீலிஸ் ஆகாத நிலையில் நடிகை நிக்கோல் பிரசன்னாவுடன் நாய்க்குட்டி என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
|
|
| |
|
|
|
|
| |
| |
மர்மயோகியில் கமலுக்கு ஹை-டைக் மேக்கப் |
 |
|
|
| |
 |
|
நடிகர் கமல்ஹாசன் 10 அவதாரம் எடுத்த தசாவதாரம் படத்தில் வெளிநாட்டு மேக்கப் யுத்திகளை பயன்படுத்தியிருந்தார். அதேபோல அடுத்து நடிக்கவுள்ள மர்மயோகி படத்திலும் ஹாலிவுட்டில் பயன்படுத்தப்படும் ஹை-டெக் மேக்கப்பை பயன்படுத்துகிறாராம்.
ஸ்பிரே மேக்கப் எனப்படும் இந்த மேக்கப் உடல் முழுவதும் ஒரே சீராக மேக்கப் போட உதவுமாம். இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக த்ரிஷாவும், ஸ்ரேயாவும் நடிக்கிறார்கள். வில்லி கேரக்டரில் நடிகை ஹேம மாலினி நடிக்கவிருப்பதாக தகவல் கசிந்துள்ளன. நடிகை ஷோபனா நாட்டியக்காரியாக நடிக்கவுள்ளாராம். தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் மர்மயோகி தயாராகவிருப்பது குறிப்பிடத்தக்கது.
|
|
| |
|
|
|
|
| |
| |
விஜயகாந்துக்கு ஜோடியாக நடிக்கிறார் அம்பிகா |
 |
|
|
| |
 |
|
நடிகர் விஜயகாந்த் அடுத்து நடிக்கவிருக்கும் படம் மரியாதை. வானத்தை போல படத்துக்கு பிறகு விஜயகாந்த் - விக்ரமன் இணையும் இந்த படத்தில் விஜயகாந்துக்கு அப்பா - மகன் என்று இரண்டு வேடங்கள்.
இதில் அப்பா விஜயகாந்துக்கு ஜோடியாக நடிக்க நடிகை சுகன்யாவை கேட்டனர். ஆனால் அவர் மறுத்து விட்டார். இதையடுத்து நடிகை அம்பிகாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். மகன் விஜயகாந்துக்கு ஜோடியாக நடிக்கவிருப்பவர் நடிகை மீராஜாஸ்மீன். காதலில் விழுந்தேன் புகழ் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனிதான் மரியாதை படத்திற்கு இசையமைக்கிறார். படத்தின் தொடக்க விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் நடிகை அம்பிகா கண்கவர் பட்டுப்புடவை அணிந்து வந்து அசத்தினார்.
|
|