* கவர்ச்‌சிக்கு நோ சொல்கிறார் நிக்கோல் * மர்மயோகியில் கமலுக்கு ‌ஹை-டைக் மேக்கப் * விஜயகாந்துக்கு ஜோடியாக நடிக்கிறார் அம்பிகா * * வரலாற்று படத்தில் அக்ஷய்குமார் * மணிரத்னத்துக்கு நோ சொன்ன நடிகை * நிஜ ஹீரோ கடவுள்தான் : பேரரசு * கோலிவுட்டின் பிஸியான இயக்குனர் வெங்கடேஷ் * வெப்சைட் துவங்குகிறார் கரீனா கபூர் * வில்லு, ஏகன் ஒற்றுமைகள் * வாள் சண்டை கற்கிறார் த்ரிஷா * கிட்நாப் நாயகி மினிஷா பேட்டி * நிருபராக நடிக்கிறார் சோஹா அலிகான் * பாலிவுட்டுக்கு போக ஆசைப்படும் தமிழ் நடிகை : ஸ்பெஷல் ரிப்போர்ட் * மரியாதை படத்தின் துவக்க விழா கேலரி * டாப் 5 படங்களின் விமர்சனம் *  
 
 
 
 
 
   
 
 
  வரலாற்று படத்தில் அக்ஷய்குமார்
   
 
   

பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் வரலாற்று படத்தின் நாயகனாக நடிக்கிறார். கோமகடா மாரு என்ற இந்த திரைப்படம் , சுதந்திரத்துக்கு முன் இந்தியர்கள் எதிர்கொண்ட இனவெறி தாக்குதலை மையமாக கொண்டது. இந்த படத்தை பிரபல இயக்குநர் தீபா மேத்தா இயக்குகிறார்.

இவர் ஃபயர், வாட்டர் போன்ற சர்ச்சைக்குரிய படங்களை இயக்கியவர். கேமாகடாமாரு என்பது 1914ம் ஆண்டு இந்தியாவிலிருந்து, கனடா நாட்டு வாண்கூருக்கு சென்ற கப்பலின் பெயர். இந்த கப்பலில் இருந்த இந்தியர்களை கனடா அரசு கரையேற அனுமதி மறுத்து, கப்பலை திருப்பி அனுப்பியது. கப்பல் திரும்ப இந்தியா வந்தபோது, ‌கோல்கட்டாவில் ஆங்கிலேய போலீசார், நூற்றுக்கணக்கான பயணிகளை ஈவு இறக்கமின்றி சுட்டுத் தள்ளினர். இந்த கோர சம்பவத்தையே தீபா மேத்தா படமாக்குகிறார். இந்த கதையில் முன்னதாக அமிதாப் பச்சன்தான் ஹீரோவாக நடிப்பதாக இருந்தது. பின்னர் அக்ஷய்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அக்ஷய்குமார், கோமகுடா மாரு கப்பலில் பயணித்த சீக்கிய வக்கீல் குர்தித் சிங்கின் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம்.

 
         
 
  பாலிவுட் தொழிலாளர்கள் ஸ்டிரைக் வாபஸ்    
 
   

சம்பள உயர்வு, மருத்துவ காப்பீடு வசதி உட்பட பலவேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாலிவுட் சினிமா தொழிலாளர்கள் கடந்த 4 நாட்களாக ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வந்தனர்.

இதனால் அனைத்து இந்தி படங்களின் சூட்டிங்குகளும் பாதிக்கப்பட்டன. தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ள பேஷன், இஎம்ஐ, கோல்மால் ரிட்டர்ன்ஸ் உள்ளிட்ட படங்களின் பணிகளும் பாதிக்கப்பட்டன. இதையடுத்து பாலிவுட் இயக்குனர்கள் சங்கத்தை சேர்ந்த மகேஷ் பட், அசோக் பண்டித் ஆகியோர் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது. இந்தி சினிமா சூட்டிங் மீண்டும் தொடங்கி ந‌டந்து வருகிவன்றன.

 
     
 
  கிட்நாப் நாயகி மினிஷா பேட்டி    
 
   

யாஹான் இந்தி படத்தில் காஷ்மீர் பெண்ணாக வந்து பாலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை மினிஷா லம்பா. அந்த படத்தை தொடர்ந்து அவர் நடித்த பச்னா ஏ ஹஸீனா படமும் வெற்றி பெற்றது.

தற்போது அவர் கிட்நாப் என்ற படத்தில் நடித்து வருகிறார். விரைவில் இந்த படம் திரைக்கு வரவிருக்கிறது. இப்படம் குறித்து மினிஷா லம்பா பேட்டியளித்துள்ளார். அதில், கிட்நாப் படத்தில் நடிகர் இம்ரான் கானுக்கு‌ ஜோடியாக நடிக்கிறேன். அது வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது. எனது தந்தையாக நடிகர் சஞ்சய் தத் நடித்துள்ளார். படத்தின் கதைப்படி படுஜாலியாக வாழ்க்கையை ரசித்து வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்ணான நான் கிட்நாப் கும்பலால் கடத்தப்படுகிறேன். அதன் பின்னர் ஏற்படும் வாழ்க்கை மாற்றங்கள் திகிலாக இருக்கும். எனக்கு விதவிதமான கேரக்டர்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். இதுவரை அப்படிப்பட்ட கேரக்டர்கள்தான் எனக்கு கிடைத்துள்ளன, என்று கூறியுள்ளார்.

 
         
 
  ஐஸ்வர்யா ராய்-க்கு ரூ.6 கோடி சம்பளம்    
 
   

முன்னாள் உலக அழகியும், பிரபல பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் ஒரு படத்தில் நடிக்க ரூ. 6 கோடி சம்பளம் வாங்குகிறார். இவருக்கு அடுத்தபடியாக நடிகை கேத்ரீனா கைப் ரூ.5 கோடி வரை சம்பளம் கேட்கிறார்.

நடி‌கை கரீனா கபூர் ரூ.3.5 கோடியும், ராணி முகர்ஜி, ரூ. 3 கோடி முதல் ரூ.5 கோடி வரையிலும், பிரியங்கா சோப்ரா ரூ.2 கோடியும், பிபாஷா பாசு ரூ.1 கோடியும் சம்பளமாக கேட்கிறார்கள். கோலிவுட்டில் இருந்த பாலிவுட்டுக்கு சென்றுள்ள ஸ்ரேயாவுக்கு ரூ.65 லட்சமும், அசினுக்கு ரூ.55 லட்சமும் சம்பளமாக வழங்கப்படுகிறது.

 
   
 
  வெப்சைட் துவங்குகிறார் கரீனா கபூர்    
 
   

பாலிவுட் நடிகை கரீனா கபூர் தனக்கென தனியாக வெப்சைட் துவங்ககவிருக்கிறார். ஏற்கனவே அமிதாப் பச்சன், அமீர்கான், ஐஸ்வர்யா ராய், குனால் கோஹ்லி உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் பலர் சொந்தமாக வெப்சைட் நடத்தி வரும் நிலையில். அந்த பட்டியலில் நடிக கரீனா கபூரும் இணையப் போகிறார்.

ரசிகர்களு‌டன் தொடர்பை நெருக்கப்படுத்தும் வகையில் உருவாகவிருக்கும் இந்த வெப்சைட்டில் விக்டோரியா பெக்காம், மடோனா, ஜெனிபர் லோபஸ் போன்றவர்களின் வெப்சைட் போல அனைத்து தகவல்களும் இருக்குமாம். கரீனா பேஷன் டிசைனிங்கில் அதிக ஆர்வம் கொண்டவர். தனது புதிய வெப்சைட்டில் பேஷன் டிசைனிங் குறித்த சிறப்பு தகவல்களும் இடம்பெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

 
         
 
  அமீர்கானின் ஆஸ்கார் நம்பிக்கை    
 
   

பாலிவுட் நடிகர் அமீர்கான் இயக்கிய தாரே ஜமீன் பர் படம் இந்திய அளவில் பல வசூல் சாதனைகளை புரிந்துள்ளது. இந்த படத்தில் நடித்தவர்களும் பல விருதுகளை பெற்றுள்ளனர்.

இந்நிலையில் ஆஸ்கார் விருதுக்கும் இந்த படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த ஆஸ்கார் போட்டி குறித்து நடிகர் அமீர்கான் கூறுகையில், லகானை தொடர்ந்து தாரே ஜமீன் பர் படமும் ஆஸ்கர் விருதுக்கான போட்டிக்கு தேர்வாகியிருப்பது மிக்க மகிழ்ச்சியை தருகிறது. இனி இப்படத்தை விருது குழுவில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களுக்கு போட்டுக் காட்ட வேண்டும். அவர்களிடையே இப்படம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். உண்மையில் நல்ல படம் எங்கிருந்தாலும், எந்த நாட்டினர் தயாரித்திருந்தாலும் அவற்றை மதித்து விருது கமிட்டியினர் வாக்களிக்கிறார்கள். அதிக வாக்குகளைப் பெற்ற படம் விருதுக்குத் தேர்வாகிறது. அந்த வகையில் தாரே ஜமீன் பர் படம் ஆஸ்கார் விருது பெறும் என்று நம்புகிறேன், என்றார்.

 
         
 
  நிருபராக நடிக்கிறார் சோஹா அலிகான்    
 
   

பாலிவுட் நடிகை சோஹா அலிகான் நடித்து வெளியான ரங் தே பஸந்தி படத்தில் சமூகத்துக்கு தேவையான கருத்துக்களை வலியுறுத்தப்பட்டிருந்தன. இப்படத்தை தொடர்ந்து அவர் நடித்து வரும் படம் மும்பை மேரி ஜான்.

இதன் கதை 2006-ல் நடந்த மும்பை ரயில் குண்டு வெடிப்பின் உண்மை நிலையை உணர்த்துவதாகும். அப்போது மும்பை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் வாழும் மக்கள் இந்த குண்டு வெடிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படியெல்லாம் ஓடிவந்து உதவினார்கள்? ரயிலுக்குள் தீயில் மாட்டிக்கொண்ட மக்களை தைரியமாக உள்ளே நுழைந்து எப்படி மீட்டார்கள்? எப்படி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள்? இறந்தவர்களை எப்படி அடையாளம் காட்டி உதவினார்கள்? என்பதை எல்லாம் விளக்குகிறதாம் இப்படம். இந்த சம்பவத்தை நேரில் பார்த்து செய்தி சேகரிக்கும் நிருபராக நடிகை சோஹா அலிகான் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 
         
 
  பாலிவுட்டை கலக்கும் ஸீரோ ஸ்டரக்சர்    
 
   

பாலிவுட்டில் "ஸீரோ ஸ்ட்ரக்சர்' எனும் புதிய தோற்றத்தில் கலக்கி வருகிறார் கரீனா கபூர். இந்த ஹாலிவுட் பாணி உடலமைப்பில் பொட்டு சதைகூட இருக்காது.

எலும்பும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா மினுமினு தோலும்தான் இருக்கும். தற்போது இப்புதிய வகை ஸ்ட்ரக்சர் ஃபீவர் தென்னிந்திய நடிகைகளையும் ஆட்கொண்டிருக்கிறது. இதற்கான முதல் முயற்சியில் இறங்கியிருக்கிறார் மொழு மொழு வெண்ணெய் காம்னா ஜெத்மலானி. அவரைத் தொடர்ந்து நடிகை சதாவும் தனது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறாராம். அந்நியன் படத்துக்கு பிறகு தமி்ழில் சரியான வாய்ப்பு இல்லாமல் இருக்கும் சதாவுக்கு, இந்தி சினிமாவின் மேல் நம்பிக்கை வந்து விட்டதாம். அதனால்தான் இந்த ஸீரோ ஸ்டரக்சர் திட்டமாம்.

 
 
   
   
 
வாசகர் கடிதம் | Font Help ? | Advertisment Tariff
© 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division, Dinamalar.
mail us your suggestions to coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in.   Best view in 1024x800 resolution.