சபரிமலையில் இருந்து 88 கி.மீ தூரத்தில் திருவனந்தபுரத்தையும், கோட்டயத்தையும் இணைக்கும் பாதையில் உள்ளது பந்தளம். பந்தள ராஜாவின் குடும்ப கோயில் இங்குள்ளது.மகர விளக்கு திருவிழாவின் மிக முக்கியமான நிகழ்ச்சியான திருஆபரண பெட்டி இங்கிருந்துதான் புறப்படுகிறது. மார்கழி 26ம் தேதி பந்தளத்திலிருந்து புறப்படும் திருவாபரணம் தை முதல் தேதி சபரிமலை வந்து சேருகிறது.
மகர சங்கிரம தினத்தில் ஜோதிபாய் ஐயன் தெரியும் போது மட்டுமே சபரிமலை ஐயப்பனுக்கு இத்திருவாபரணங்கள் சாத்தப்பட்டிருக்கும்.
ஐயப்பன் திருவுருவில் அணிவிக்கும் ரத்ன மகுடம், நூபுரம், ஆரம், கடகம், அங்குலியங்கள், பதக்கம் ஆகியவை ஒரு பெட்டியிலும், மாளிகைபுறத்தம்மனுக்கு அணிவிக்க வேண்டிய ஆபரணங்கள் மற்றொரு பெட்டியிலும் கொண்டு வருவர். தை முதல்நாள் பிற்பகலில் திருஆபரண பெட்டி சபரிபீடம் வந்தடையும்போது, வானத்தில் பருந்துகள் தோன்றி வட்டமிட்டு, திருஆபரண பெட்டியுடன் தொடர்ந்து வரும் காட்சி கண்கொள்ள அதிசய காட்சி.
ஐயனுக்கு திருஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சங்கிரம தினத்தின் அந்திம நேரத்தில் மங்களகரமான தீபாராதனை காண பத்தணம்திட்டா (10 கி.மீ), ஆரமுளா (10 கி.மீ), எருமேலி (52.கி.மீ), ஆகிய இடங்களுக்கு செல்ல அரசு மற்றும் தனியார் பஸ்கள் உள்ளன. தங்கும் விடுதி வசதியும் இங்கு உண்டு. இது தவிர பெட்ரோல் பாங்க். பாங்க் வசதி கூட உண்டு.