Home இதை எனது முதல் பக்கமாக்கு | வணக்கம்...வணக்கம்... யூ.எஸ்.ஏ தினமலர் வாசகரே ..! Get FontSite Map |

தினமலர்

அருள் தரும் வரலாறு

பதினெட்டாம் படி பாலகன் வரலாறு்

 

அரக்கி மகிஷி. தேவலோகத்தையும் பூலோகத்தையும் ஆட்டி படைத்து கொண்டிருந்த நேரம் அது....

தன் சகோதரன் மகிஷாசுரனின் அழிவுக்கு தேவர்களே காரணம் என கருதி அவர்களை பழிவாங்க மகிஷி முடிவு செய்தாள். அதற்கான சக்தியை பெற மகிஷி பிரம்மாவை நோக்கி தவம் புரிந்தாள். பிரம்மா, இவள் முன் தோன்றி, வேண்டும் வரம் கேள் என்றார்.

 

சிவனுக்கும், விஷ்ணுவுக்கும், பிறந்த புத்திரனால் அல்லாது வேறு யாராலும் எனக்கு மரணம் நேரிடக்கூடாது என மகிஷி வரம் கேட்டாள். கேட்ட வரம் கிடைத்தது. வரம் பெற்ற மகிஷி தேவலோகத்தில் தேவர்களையும், பூலோகத்தில் மக்களையும் கடும் கொடுமைப்படுத்தி வந்தாள்.

 

தேவர்கள் துயரம் தாங்காமல் பரமசிவனிடத்தில் முறையிட்டனர். விஷ்ணுவின் அம்சமான மோகினி மூலம் சைவ வைஷ்ணவ ஜோதியாக ஐயப்பன் பூலோகத்தில் அவதரித்தார். பம்பாதீரத்தில் ஒரு குழந்தையாய் ஐயன் அழும் சமயத்தில் பாண்டிய மன்னனும், பந்தளத்து அரசனுமான ராஜசேகரன், குழந்தை இல்லாத தனக்கு பகவானே அளித்ததாக எண்ணி அந்தக் குழந்தையை பந்தளம் கொண்டு வந்து ராணியிடம் கொடுத்து மகிழ்வித்தார். கழுத்தில் மணி இருந்தால் மணிகண்டன் என்றும் ஐயப்பன் என்றும் பெயர் ‘ட்டினார். பகவான் வருகையால் ராணியும் கருவுற்றாள்.

 

எல்லா லட்சணங்களுடனும் கூடிய பாலகனும் பிறந்தான். ராஜராஜன் என்ற அந்த ராஜகுமாரன் எல்லா நலன்களும் ஏற்படுகிறது என்பதை புரிந்து கொண்ட ராஜசேகரன், மணிகண்டனுக்கு பட்டாபிஷேகம் செய்வதற்கு ஏற்பாடு செய்தார். இதை உணர்ந்த மந்திரி, மணிகண்டன் ராஜாவானால் தனக்குள்ள செல்வாக்கும், வசதிகளும் போய்விடும் என்று எண்ணி மணிகண்டனையே ஒழிக்கப்பார்க்கிறான். ஆனால் ஒன்றும் பலிக்கவில்லை. பின் தனது ‘ழ்ச்சியால் புலிப்பால், கொண்டு வந்தால்தான் மகாராணிக்கு வந்துள்ள நோய் போகுமென்று அரண்மனை வைத்தியர்களைக் கொண்டுச் சொல்லச் செய்கிறான்.

 

இது ‘ழ்ச்சி என்று தெரிந்தபோதிலும், மணிகண்டன் புலிப்பால் கொண்டு வர காட்டுக்குச் செல்கிறான். ஐயனின் வரவிற்காகக் காத்திருந்த தேவர்கள் பகவானை பொன்னம்பல மேட்டில் பூஜை செய்து மகிஷியினால்படும் துயரத்தைக் கூறனர். மணிகண்டன் தேவலோகம் சென்று மகிஷியை தேவலோகத்தில் நின்று பூமிக்குத் தள்ள மகிஷி அழுதா நதிக்கரையில் விழுந்தாள்.

 

ஐயன் அவள்மேல் நர்த்தனமாடி, மகிஷியை உயிரிழக்க செய்தார். மகிஷி மீண்டும் சாப விமோசனம் பெற்று ஐயனை அடையும் ஆவலைத் தெரிவித்தாள். ஆனால் தான் பிரம்மச்சர்ய நிஷ்டையுள்ளவனானதால் அது சாத்தியமாகாதுஎன்றும், தான் இருக்கும் இடத்தின் இடப்பக்கத்தில் மாளிகைப்புரத்தம்மா என்ற பெயருடன் அவர் விளங்கிவர ஐயன் அருள் செய்தார்.

 

மகிஷியின் கொடுமை நீங்கியதால் சந்தோஷமடைந்த தேவர்கள் மணிகண்டனை பலவிதமாக துதித்து பூஜித்தனர். பின் யாவரும் புலியாக மாறி ஐயனின் பணிகளை நிறைவேற்றுவதற்காகப் பந்தளம் சென்றனர். புலிக்கூட்டம் வருவதை கண்டு மக்கள் பீதியடைந்தனர். ஐயப்பனின் சக்தியும், பெருமையும் உணர்ந்து மந்திரியும், ராணியும் மணிகண்டனிடம் மன்னிப்பு கேட்டனர்.

 

மணிகண்டனும், மன்னிப்பதற்கு எதுவுமில்லை. எல்லாம் லீலைகள்படி நடந்துள்ளன. நான் பூமியில எதற்காக பிறந்தேனோ, அந்த வேலை முடிந்துவிட்டது. இனி நான் தேவலோகம் செல்கிறேன் என்றான். மன்னன் பகவானே தாங்கள் எங்களுடன் இருந்ததன் அடையாளமாக உங்களுக்கு ஒரு கோயில் கட்ட நினைக்கிறோம். அதை எங்கு கட்ட வேண்டும் என்று சொல்லுங்கள் என்றான். மணிகண்டன் ஒரு அம்பை எடுத்து எய்து, இந்த அம்பு எங்கு போய் விழுகிறதோ அங்கு கோயில் எழுப்புங்கள் என்றான். அந்த அம்பு சபரிமலையில் விழந்தது. அங்கு 18 படிகளுடன், கிழக்கே நோக்கி தனக்கும் பக்கத்தில் மாளிகைப்புறத்தம்மனுக்கும் கோயில் கட்டும்படி கூறிவிட்டு மணிகண்டனாகிய ஐயப்பன் தேவலோகம் சென்றார்.

 

மணிகண்டன் கட்டளைப்படி, அகத்திய முனிவரின் ஆலோசனையுடன் மன்னர் ஊண், உறக்கமின்றி தானே மேற்பார்வை செய்து சபரிமலையில் பதினெட்டு படியோடு கூடிய அழகிய கோயிலை கட்டினார்.

 

ஆண்டுதோறும் லட்சோப லட்சம் மக்கள் ஜாதி, மத பேதமின்றி மாலை அணிந்து 4 நாட்கள் கடும் விரதம் அனுசரித்து சபரிமலை வந்து புனித பதினெட்டுப்படி ஏறி ஐயப்பன் அருள் பெற்று வருகின்றனர். ஆண்டுதோறும் மகர சங்கராந்தி தினத்தன்று ஐயப்பன் பக்தர்களுக்கு ஜோதி வடிவில் காட்சியளித்து அருள்பாலிக்கிறார்.

 

அச்சம் தீர்க்கும் அச்சன் கோவில்

 

அச்சன் கோவில் அரசனான ஐயப்பன் வீற்றிருக்கும் பகுதி தமிழக, கேரள எல்லையிலுள்ள செங்கோட்டையிலிருந்து 28 கி.மீ தூரத்தில் உள்ளது. கேரள மாநிலத்தின் அடர்ந்த வனப்பகுதியில் இயற்கை ‘ழ்நிலையில் இந்த தலம் அமைந்துள்ளது.

 

ஐயப்பன் பாலகனாக வளர்ந்தது குளத்துப்புழையில். இளைஞனானதும் அவர் அச்சன்கோயில் வந்தார். சபரி மலை ஐயப்பன் கோயிலுக்கு அடுத்து பிரசித்தி பெற்றது அச்சன்கோவில் ஆகும்.

 

அச்சன்கோவில் பரசுராமரால் தோற்றுவிக்கப்பட்டது. பல தலங்களில் உள்ள ஐயப்பன் விக்கிரகங்கள் தீயாலும், இதர ஐயற்கை சக்திகளாலும் பாதிப்படைந்து மாற்றப்பட்டவை. ஆனால் அச்சன்கோவில் ஐயப்பன் கோயிலில் மட்டும் பழைய விக்ரகம் இன்றும் உள்ளது. கார்த்திகை மாதம் 30ம் தேதி புனலூர் கருவூலத்திலிருந்து அச்சன்கோவில் அரசனுக்கு திரு ஆபரணங்கள் கொண்டுவரப்படும். மார்கழி முதல்நாள் காலை கொடியேற்றத்துடன் திருவிழா நடக்கும். ஐயப்ப தலங்களிலேயே 10 நாள் திருவிழா நடப்பது சபரி மலையிலும் அச்சன் கோயிலிலும் மட்டமே ஆகும். அச்சன்கோவிலில் நடக்கும் விழாவில் 9வது நாளன்று தேரோட்டம் நடத்தப்படும். மற்ற ஐயப்ப தலங்களில் தேரோட்டம் கிடையாது. இந்த கோயிலுக்கு ஒரு விசேஷமுண்டு. விஷப்பூச்சிகள் தீண்டினால் நள்ளிரவு நேரமானாலும் நடை திறக்கப்பட்டு ஐயப்பனின் விக்ரகம் மீதுள்ள சந்தனத்தை பூசினால் விஷம் நீங்கிவிடும் என்று இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதற்காக வைத்தியரை நாடி யாரும் செல்வதில்லை.

 

ஐயப்பனின் வாழ்வில் வாபரின் பங்கு

 

வாபர் ஒரு இஸ்லாமியர். கொள்ளைக்காரனாக இருந்தனர். ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் வழியில் அவர் தன்னுடன் வந்த மக்களுக்கு கூடாரங்கள் அமைத்துக் கொடுத்து தங்க வைத்திருந்தார். கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் கொள்ளையடித்து அந்த பொருட்களை தன்னுடன் தங்கியிருந்தவர்களுக்கு வழங்கி வந்தார். அரசர்களால் வாபரை பிடிக்கமுடியவில்லை. எனவே அவர்கள் ஐயப்பனிடமே இதுபற்றி முறையிட்டனர்.

 

ஒருமுறை ஐயப்பன் வாபரை காணச்சென்றார். குழந்தையாக இருந்த ஐயப்பன் வாபருக்கு எச்சரிக்கை விடுத்தார். என்னைக் காணவரும் பக்தர்களை துன்புறுத்தினால் உன்னை அழித்துவிடுவேன் என்று கூறினார். இரக்க குணமுள்ள வாபர் சிறுவனான ஐயப்பனை பார்த்து, நீ என் குழந்தை போல இருக்கிறாய். உன்னை எப்படி நான் கொல்லுவேன். என்னை நீ துன்புறுத்தாதே. போய்விடு என்றார். இதற்கெல்லாம் கலங்காத ஐயப்பன் வாபரை கொல்ல முயன்றார். உடனே வாபர் ஐயப்பனிடம் என்னை நீ கொன்றுவிட்டால் என்னை நம்பி இங்கு குடியிருக்கும் மக்களை என்ன செய்யப்போகிறாய் என்று கேட்டார்? உடனே ஐயப்பன் அவர்களுக்கு வேண்டிய பொருளைக் கொடுத்து நல்லபடியாக வாழ வைக்கிறேன் என்றார்.

 

அதன்படி அந்த இடத்தில் ஒரு பள்ளிவாசல் கட்டப்பட்டது. அத்துடன் எனது கோயிலக்கு வரும் பக்தர்கள் உனது இடத்துக்கும் வருவார்கள். அவர்களை சோதித்தபின்பே நீ எனது மலைக்கு அவர்களை அனுப்பி வைக்க வேண்டும்.

 

இதன்படி சரியாக விரதமிருக்காதவர்கள், பிரம்மச்சாரியம் பூணாதவர்கள், இளம் பெண்கள் ஆகியோரை நீ இந்த இடத்திலேயே தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்று உத்தரவிட்டார்.

 

ஐயப்பனின் தாராள மனமறிந்த வாபர், ஐயப்பனின் சொல்படி இன்றுவரை பக்தர்களை சோதித்துக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. இந்தப் பள்ளிவாசலில் பக்தர்களுக்கு இப்போதும் திருநீறு தருகிறார்கள். அங்கு விபூதி பூசியபிறகுதான் சபரிமலைக்கு செல்வது வாடிக்கையாக இருந்து வருகிறது.

 

சாஸ்தாவின் நான்கு படை வீடுகள்

 

கேரளாவில் நான்கு இடங்களில் சாஸ்தா கோயில்கள் ஸ்தாபிக்கப்பட்டன.

 

குளத்துப்புழையில் பிரம்மச்சரிய நிலையிலும், ஆரியங்காவில் கிரகஸ்ரீஸ்தாஸ்ரம் நிலையிலும் அச்சன் கோவிலில் வன அரசராகவும் சபரிமலையில் சந்தியாசி கோலத்திலும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு கோவில்களுக்கும் தனித்தனி சிறப்புகள் உள்ளன.

 

குளத்துப்புழை: செங்கோட்டையில் இருந்து 50 கி.மீ தொலைவில் உள்ளது குளத்துப்புழை. சிறு குழந்தைகள் நுழையும் அளவுக்கே கோயிலின் வாசல் அமைந்திருக்கும். சன்னதியில் பாலகன் வடிவில் தவழ்ந்த கோலத்தில் ஐயப்பன் காட்சி தருகிறார்.

 

விஜயதசமியன்று வித்தியாரம்பம் என்ற பெயரில் இங்கு நடக்கும் நிகழ்ச்சி மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோயிலுக்கு சென்று வழிபட்டு பள்ளியில் குழந்தையைச் சேர்த்தால் கல்வியில் குழந்தை தேர்ச்சி பெறும் என்பது ஒரு நம்பிக்கை. குழந்தை வரம் வேண்டி வருவோரின் துன்பமும் தீரும். கோயில் முன்பு மீன்கள் துள்ளி விளையாடும் ஆறும் ஓடுகிறது. குடும்பத்துடன் சென்று ஐயப்பனை வழிபட ஏற்ற தலம்.

 

ஆரியங்காவு

 

செங்கோட்டையில் இருந்து 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ஆரியங்காவு. ஐயப்பன் மதகஜவாகன ரூபனாக அம்பாளோடு காட்சி தருகிறார். மதம் பிடித்த யானையை அடக்கி அதன் மேல் அமர்ந்து, மாப்பிள்ளை கோலத்தில் காட்சி தருகிறார். அவருக்கு இடப்பக்கம் ஸ்ரீபுஷ்கலாதேவி காட்சி தருகிறார். சவுராஷ்டிர குலதேவி புஷ்கலாதேவியின் பக்தியை மெச்சி, அவரை தன்னோடு இத்தலத்தில் ஐக்கியப்படுத்திக் கொண்டதாக ஐதீகம். இந்த தலத்தில் நிச்சியதார்த்த விழா, நலுங்கு வைபவம். திருக்கல்யாணம் ஆகியவை சவுராஷ்டிர சமூக கலாச்சார பாரம்பரிய முறைப்படி நடக்கிறது. சவுராஷ்டிர மக்களுக்கு இங்கு திருக்கல்யாண உற்சவத்தின் போது சம்பந்தி மரியாதை தரப்படுகிறது. இந்த கோயிலின் முன்பு ஓடும் ஆறு கோயிலின் முன்பு ஓடும் ஆறு கோயில் சன்னதி படிகளைத்தொட்டுச் செல்வது கண்கொள்ளாக் காட்சியாகும்.

 

சாஸ்தாவின் நான்கு கோயில் களில் இங்கு மட்டுமே திருக்கல்யாண மண்டபம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். திருமண வரம் வேண்டுவோர் இந்தக் கோயிலில் வழிபாடு செய்வார்கள்.

 

அச்சன் கோவில்

 

செங்கோட்டையில் இருந்து 30 கி.மீ தொலைவில் அச்சன்கோவில் உள்ளது. ஐயப்பன் வன அரசராக இரு தேவியரோடு காட்சி தருகிறார். ஆண்டுதோறுமம் மார்கழி 1ம் தேதி இங்கு விழா துவங்கும். வாழ்க்கையில் அமைதியை வேண்டுவோர் இந்த கோயிலுக்கு செல்லலாம். இங்குள்ள விஷமுறி தீர்த்த கிணற்றுத் தண்ணீரை பருகினால் எந்த கொடிய விஷமும் இறங்கிவிடும் என்று கூறுவதுண்டு. 9ம் திருவிழா அன்று தேரோட்டம் நடக்கும்.

 

மாம்பழத்துறை

 

ஆரியங்காவிலிருந்து 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது மாம்பழத்துறை. அடர்ந்த வனப்பகுதியான இங்கு புஷ்கலாதேவி, பசுவதி என்னும் திருநாமத்துடன் பத்ரகாளி ரூபத்தில் காட்சி தருகிறார். ஆரியன்காவு தலத்தில் புஷ்பவாகனத்தில் புஷ்கலாதேவியை தன்னுடன் ஐக்கியப்படுத்திக் கொண்ட பகவான் இந்த திருமணத்தால் தனது காவல் பணிக்கு பங்கம் வரக்கூடாது என்று எண்ணி மாம்பழத்துறையில் அம்பாளை வாசம் செய்ய பணிந்துள்ளார்.

   

விசேஷ அம்சம்: இந்த கோயில்களுக்கு இடைப்பட்ட தூரம் பூகோள ரீதியாக 18 மைல்களாகும். இது எண்ணி எண்ணி வியக்க வைக்கும் அம்சமாகும். ஐயப்பன் கோயிலில் 18 படிகள் இருப்பதால் 18 மைல்களை கணக்காக கொண்டு இந்த கோயில்களை எழுப்பியிருப்பார்களோ...

 

ஐயப்பன் கோயில் பூஜாரியை தேர்ந்தெடுக்கும் வித்தியாசமான முறை

 

கேரள மாநிலத்தில் கோயில்கள் தமிழகத்தைப் போல இருப்பதில்லை. அவற்றின் அமைப்பு முற்றிலும் மாறுபட்டது. ஓட்டு கட்டடங்களில் வீடுகள் போன்றே கோயில்கள் இருக்கும். கோயில்களின் அமைப்பு மட்டுமல்ல. அங்கு பூஜை முறைகளும் வித்தியாசமானவை. தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம் நீங்கலாக அனைத்து மாவட்ட கோயில்களிலும் கருவறைக்குள் எந்த பூஜாரி வேண்டுமானாலும் சென்று பூஜை செய்யலாம். ஆனால் கேரளாவில் மேலசாந்தி எனப்படும் தலைமை பூஜாரிக்கே கருவறைக்குள் செல்லும் உரிமை உண்டு. ஆனால் சபரிமலை கோயிலில் இந்த விதிமுறையுடன் பூஜாரியை தேர்ந்தெடுப்பதே வித்தியாசமானதாக இருக்கும். அதே நேரம் பெரும் யோகம் உள்ளவரும், பாக்கியசாலியாக இருப்பவருமே இந்த பொறுப்பிற்கு வரமுடியும்.

   

தேவஸ்வம்போர்டு சபரிமலை கோயில் மேல்சாந்தி பதவிக்கு தகுதியுடையவர்களை விண்ணப்பிக்கச் சொல்லி அறிவிப்பு வெளியிடும். இந்த விண்ணப்பங்கள் கவனமாக பரிசீலிக்கப்பட்டு,தகுதியுடையவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். உதாரணமாக 9 பேர் தேர்ந்தெடுக்கப்படுவதாக வைத்துக்கொள்வோம். ஐயப்பன் சன்னிதானத்தில் குலுக்கல் மூலம் இவர்களில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். குலுக்கல் முறையும் வித்தியாசமானது.

   

ஒன்பது பேரின் பெயர்களும் தனித்தனியாக சீட்டுகளில் எழுதப்படும். இவை ஒரு குடத்தில் போடப்படும். அடுத்து மேல்சாந்தி என எழுதப்பட்ட ஒரு சீட்டு அந்த குடத்தில் போடப்படும். ஒரு குழந்தையை அழைத்து சீட்டை எடுக்கச் சொல்வார்கள். சீட்டை எடுத்ததும்,அடுத்த சீட்டை எடுக்கச் சொல்வார்கள். அதில் மேல்சாந்தி என எழுதப்பட்ட சீட்டு வராவிட்டால் அந்த சீட்டில் இருக்கும் பெயருடையவர் போட்டியிலிருந்து விலக்கப்படுவார். இப்படி வரிசையாக சீட்டுகள் எடுக்கப்படும். எந்த பெயருடையவரின் சீட்டும், அதையடுத்து மேல்சாந்தி என எழுதப்பட்ட சீட்டும் வருகிறதோ அவரே மேல்சாந்தியாக தேர்ந்தெடுக்கப்படுவார். இப்படி கடினமான முறையில் தேர்ந்தெடுக்கப்படுபவரே ஐயப்பனுக்கு பூஜை செய்யும் பாக்கியம் பெறுவர். அது மட்டுமல்ல. இவருடைய பதவிக்காலம் ஒரு ஆண்டு தான். அடுத்த ஆண்டு புதிய பூஜாரி தேர்ந்தெடுக்கப்படுவர்.

   

இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் பூஜாரிக்கும் சில நிபந்தனைகள் விதிக்கப்படும். அதாவது ஒரு ஆண்டு காலமும் பூஜாரி சபரிமலையிலேயே தங்கியிருக்க வேண்டும்.அவரது வீட்டில் எந்த சுக துக்கமானாலும் வீட்டுக்கு போகக்கூடாது. ஐயப்பனின் சேவைக்கே தன்னை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும்.

   

ஆனால் ஒரு முறை ஐயப்பன் கோயில் மேல்சாந்தியாக இருப்பவர் தன் தலைமுறைக்கு வேண்டிய சொத்தை சேர்த்து விடுவர் என்பார்கள். பக்தர்கள் தரும் காணிக்கையே பெருமளவு அவருக்கு சேரும். சபரிமலைக்கு செல்வது மட்டுமல்ல.சபரிமலையின் பூஜாரி ஆவது கூட சபரிமலைக்கு செல்வது போல கடினமானது தான்.

 

ஐயப்பனோடு 60 நாட்கள்

 

கார்த்திகை முதல் நாள் மாலையணிந்து அறுபது நாட்கள் விரதமிருந்து சபரிமலை செல்லும் பக்தர்கள் பல கோடி. இந்த புனித யாத்திரைக்கு மாலையணிந்து, இருமுடி சுமந்து செல்வதே நல்லது.

   

சபரிமலை செல்லும் பக்தர்கள் கார்த்திகை முதல் நாள் மாலையணிந்து கொள்ள வேண்டும். துளசி மணி மாலையும்,உத்திராட்ச மாலையும் அணிவதே மரபு. ஐயப்பன் சிவன், விஷ்ணு ஆகியோரின் மகன். எனவே சினுக்குரிய உத்திராட்ச மாலையையும், விஷ்ணுக்குரிய துளசி மாலையையும் அணிகிறார்கள். மாலையணிந்த பக்தர்களை ஐயப்பா அல்லது சுவாமி என அழைக்கிறோம். ஐயப்பனாகவே அவரைக் காண்கிறோம்.

   

விரதமுறை: மாலையணிந்த நாள் முதல் 60 நாட்கள் பிரம்மச்சரியம் மேற்கொள்ள வேண்டும். பிரம்மச்சரியம் என்பது இல்லற வாழ்க்கையிலிருந்து ஒதுங்கி இருத்தல் மட்டுமல்ல. பிரம்மச்சரியம் என்பது,(பிரம்மம் + சரீரம்) பிரம்மமாகிய கடவுளை சரீரத்துக்குள் நிறுத்துதல் என பொருள்படும்.இந்த யாத்திரையின் நோக்கம் உலகில் உள்ள அனைவரும் ஒன்றே. இறைவன் எல்லோருக்கும் பொதுவானவன். நம்மில் ஜாதி, மத, இன வேறுபாடுகள் இன்றி ஒன்றே குலம், என்னும் தத்துவத்தை உணர்த்துவதாகும். ஆன்றோர் தரிசனம், சுலய வழிபாடு,நன்னடத்தை, அன்னதானம் ஆகியவற்றை மாலையணிந்த ஐயப்பமார்கள் பின்பற்றுதல் வேண்டும்.

   

இருமுடியின் தத்துவம்: சபரிமலை செல்லும் ஐயப்பமார்கள் தலையில் சுமந்து செல்லும் பொருட்களை இருமுடியாக கட்டி சுமந்து செல்வார்கள். இரண்டு முடிகளில் முன்முடி-புண்ணியம்,பின்முடி-பாவம் என்பதைக் குறிக்கின்றன. புண்ணியம்,பாவம், ஆகிய இரண்டையும் இருமுடிகளாக்கி தலையில் ஏந்திச் செல்கின்றனர்.ஐயப்பனை தரிசித்து வீடு திரும்பும்போது,பாவம் என்கிற பின்முடியை விட்டுவிட்டு புண்ணியம் என்னும் ஐயப்பனின் பிரசாதம் நிரம்பிய ஒரு முடியோடு திரும்புகிறோம். முன்முடியில் நெய்யை தேங்காயில் ஊற்றி எடுத்துச் செல்கிறோம். அந்த நெய் ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. தேங்காய் சிவபெருமானையும், நெய் விஷ்ணுவையும் குறிக்கிறது.

   

மகர ஜோதி தரிசனம் காண விரும்பும் பக்தர்கள் 60 நாளும்,மண்டல பூஜைக்கு செல்பவர்கள் 41 நாளும் விரதம் இருக்கவேண்டும். இப்போது இந்த முறை மாறி, கோயிலுக்கு செல்வதற்கு சில நாட்களுக்கு முன்பு மாலையணிந்து விட்டு, உடனே திரும்பி விடுவது வழக்கமாக உள்ளது.

   

காலங்காலமாக இருக்கும் விரதமுறைகளை மாற்ற முயல்வது நல்லதல்ல. இதை பக்தர்கள் உணர்ந்து செயல்பட்டால் ஐயப்பன் மனம் மகிழ்வார்.

 

சின்முத்திரையின் தத்துவம்

 

சின்முத்திரை என்னும் சொல் ஞான அடையாளம் எனப் பொருள்படும்.சித்-ஞானம், முத்திரை அடையாளம். எனவே ஞானப்பொருளின் அடையாளக் குறிப்பாகத் திகழ்வது சின்முத்திரை எனலாம்.ஐயப்பன் தம் திருக்கையால் சின்முத்திரையைக் காட்டிக் கொண்டிருக்கிறார். வலது கைக் கட்டைவிரலும், சுட்டு விரலும் ஒன்றையொன்று வளைத்து சார்ந்து நிற்க, ஏனைய மூன்று விரல்களும் விலகித் தனித்தனியேச் சேர்ந்து நின்று கொண்டிருக்கும் நிலை சின்முத்திரையாகும். நடுவிரல், மோதிர விரல், சுண்டு விரல் என்னும் மூன்றும் முறையே ஆணவம், மாயை, கண்மம், என்னும் மும்மலங்களைக் குறிப்பனவாகும்.நடுவிரல் நீண்டு முனைந்து நிற்பதால்,ஆணவ மலத்தைக் குறிப்பதாக உள்ளது. அதற்கு அடுத்த விரல், மாயாமலத்தைக் குறிப்பது என்பதனைப் புலப்படுத்தவே, மாயா, மல சம்பந்தமான பொன் முதலியவற்றால் இயன்ற மோதிரத்தினை, அதன் கண் நாம் அணிந்து கொள்கின்றோம்.

   

பெருவிரல் உதவியின்றி, நாம் எதனையும் எடுத்தல், பிடித்தல் முதலியன செய்தல் இயலாது. ஆதலின் அது சின்முத்திரையில் பகுதியினைக் குறிக்கின்றது. சுட்டுவிரல் தன்னியல்பில் ஏனைய மூன்று விரல்களோடு சேர்ந்து பெருவிரலை பிரிந்து நிற்கின்றது. அது பசு எனப்படும்.

   

கட்டைவிரலின் அடியில் சுட்டுவிரல் சென்று சேர்ந்து படிந்து நிற்பது. முத்திரையில் உயிர்கள் சிவத்தின் திருவடிகளில் சென்று ஒன்றி நிற்றலைப் புலப்படுத்துகின்றது.

   

உயிர்கள் பிறப்பு இறப்புத் துன்பங்களிலிருந்து விடுபடுதல் வேண்டுமாயின்,மும்மலங்களின் தொடர்பை விட்டுப் பதிப்பொருளின் திருவடிகளை அடையப் பெறுதல் வேண்டும். அதனை விளக்கவே சின்முத்திரையில் சுட்டுவிரலானது தான் சேர்ந்துள்ள ஏனைய மூன்று விரல்களைப் பிரித்து கட்டை விரலின் அடியில் சென்று வளைந்து பணிந்து தொட்டுக் கொண்டிருக்கிறது.

 

மகரஜோதியின் தத்துவம்

 

இறைவனுக்கென்று உருவ வழிபாடு பிற்காலத்தில் தான் இருக்க முடியும். ஏனெனில் மனிதன் தோன்றிய காலத்தில் உலோகங்கள் இருந்திருக்க வாய்ப்பில்லை. கற்களில் துவங்கிய சிற்பக்கலை படிப்படியாக வளர்ந்து, பிற்காலத்தில் ஐம்பொன் வரை சென்றது. எனவே மனிதன் துவக்க காலத்தில் ஒளியையே தெய்வகமாக வழிபட்டுள்ளான். ‘ரிய வழிபாடு முதலில் தோன்றியது. நம்மை மீறிய ஒரு சக்தி இருக்கிறது என மனிதன் பகுத்தறிந்த போது ஜோதி வடிவாக அவன் இறைவனைக் கண்டான். அதனால்தான் வள்ளலார் இறைவனை அருட்பெருஞ்ஜோதி என அழைத்தார்.

   

இறைவன் திருவண்ணாமலையில் ஜோதியாய் காட்சி அளிக்கிறார். கார்த்திகை அன்று ஏற்றப்படும் தீபம் ஆண்டு முழுவதும் எரிவது அதனால் தான். இதே போல் தான் ஐயப்பசுவாமியும் ஜோதி வடிவாக காட்சி அளிப்பது, பொன்னம்பல மேட்டில் மகரசாந்தியன்று அவர் ஆண்டுதோறம் இந்த கலிகாலத்திலும் ஜோதி வடிவாய் காட்சி அளிக்கிறார்.

 

ஐயப்பன் வரலாறு காட்டும் அரிய தத்துவம்

 

கடவுளை வணங்குவோருக்கு வேண்டியது கிடைக்கும். அப்படி கிடைத்ததை தவறான செயலுக்கு பயன்படுத்தினால் தண்டனையும் உடனே கிடைக்கும். சாகாவரம் பெற்றவர்களுக்கு கூட ஏதோ ஒரு சக்தியால் அழிவு நிச்சயம். நிலையற்றது இந்த வாழ்க்கை. எனவே வாழும் காலத்தில் நல்லவனாய் வாழ்ந்துவிட்டால் மீண்டும் இந்த பிறவிப் பெருங்கடலை நீந்த வேண்டாம் என்ற அரிய தத்துவங்களை உணர்த்தும் தலம் சபரிமலை.

   

சபரிமலை ஐயப்பனின் வரலாற்றில் முதலில் ஆடம்பரமான அரண்மனை வாழ்வு... இது நிலைத்ததா என்றால் இல்லை. தெய்வப்பிறவியான ஐயப்பனுக்கு கூட இந்த வாழ்வு நிலைக்கவில்லை என்றால் சாதாரண மனிதர்களான நமக்கு மட்டும் நிலைத்து விடுமா என்ன... எனவே தான் ஐயப்பன் கோயிலுக்கு செல்ல எளிமையான ஏற்றத்தாழ்வற்ற சீருடை அணிந்து, ஒன்று போல இருமுடி கட்டி, ஒற்றுமையாய் கூட்டமாய் போய் அவனை வணங்கிவிட்டு வருகிறோம்.

 

ஐயப்பனுக்காக காத்திருக்கும் மாதரசி மஞ்சமாதா

 

கார்த்திகை மாதம் பிறந்தது முதல் தை மாதம் முதல் தேதி வரையில் சரணகோஷம் எங்கும் ஒலிக்கும். சுவாமி ஐயப்பனின் வாழ்வில் முக்கிய பங்கேற்றவள் மஞ்சமாதா. மஞ்சமாதாவை வணங்கும் ஆண்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். மஞ்சமாதா ஒரு காலத்தில் சாபம் ஒன்றால் அரக்கியாகப் பிறந்தாள். சிவனுக்கும், விஷ்ணுவுக்கும் பிறக்கும் குழந்தையால்தான் இவளுக்கு சாபவிமோசனம் கிடைக்கும் என கூறப்பட்டது. 12 ஆண்டுகள் அரக்கியாக வாழவேண்டும் என்பது அவளின் விதியாகிவிட்டது. அப்போதுதான் ஐயப்பன் அவதரிக்கும் காலம் உருவானது.

   

சிவனுக்கும், மோகினி உருவெடுத்த விஷ்ணுவுக்கும் மகனாக ஐயப்பன் அவதரித்தார். கழுத்தில் மணியுடன் பிறந்ததால் இவர் மணிகண்டன் என்று அழைக்கப்பட்டார். காட்டில் விடப்பட்ட ந்தக் குழந்தையின் அழுக்குரல் கேட்டு வேட்டைக்கு வந்த பந்தள மகாராஜா ராஜசேகரன் குழந்தையை அரண்மனைக்கு எடுத்துச் சென்றார். குழந்தை இல்லாத அவர் மணிகண்டன் மீது மிகவும் பாசம் வைத்திருந்தார். மணிகண்டன் வந்த நேரத்தில் மகாராஜாவுக்கும், குழந்தை பிறந்தது. மகிண்டனுக்கு தரப்படும் முக்கியத்துவத்தை பார்த்த அமைச்சர்களுக்கு மணிகண்டன் மீது பொறாமை ஏற்பட்டது. பிற்காலத்தில் வாரிசு உரிமையை மணிகண்டன் பெற்றுவிட்டால் உங்களுடைய குழந்தையின் நிலைமை என்னவாகும் என மகாராணியின் மனதை அமைச்சர்கள் மாற்றினர்.

   

இதனால் மகாராணி தனக்கு தலைவலி வந்ததுபோல நடித்தார். காட்டிற்கு சென்று புலிபால் கொண்டு வந்து மூலிகை ‘ரணத்துடன் கலந்து கொடுத்தால்தான் தலைவலி குணமாகும் என வைத்தியர்களை சொல்ல வைத்தார். அதன்படியே ஐயப்பன் காட்டிற்கு சென்றார். மகிஷியை அழித்தார். காட்டில் சிவலிங்கம் உருவாக்கி சிவனை வழிபட்டார். அங்கு தோன்றிய சிவன் இந்திரன் புலியாக மாறுவார். தேவர்கள் புலிக்கூட்டமாக மாறி உன்னுடன் வருவார்கள். அவர்களை அழைத்துச சென்று புலிபால் கொடு என கூறானர். அதன்படி மணிகண்டன் புலிக்கூட்டத்துடன் ஊருக்குள் நுழைந்தார். இதைப்பார்த்து அரண்மனையில் உள்ளவர்கள் மட்டுமின்றி மக்களும் ஆச்சரியப்பட்டனர்.

   

சந்தேகமடைந்த மகாராஜா புலிகளையே கூட்டிவரும் நீ யார் என்று கேட்டார். அப்போதுதான் மணிகண்டன் உண்மையை சொன்னார். தான் ஒரு தெய்வப்பிறவி என்றும் தனது ஆயுள் காலம் 12 ஆண்டுகள்தான் என்றும் கூறினார். இப்போது காட்டிற்கு சென்று மகிஷியை அழித்துவிட்டு ஐந்து மலைகள் சங்கமமாகும் ஒரு இடத்தில் தவசு கோலம் பூண்டு தங்கிவிடுவேன் என கூறிவிட்டு காட்டிற்கு புறப்பட்டார். அப்போது மகாராஜா பிரிவு துயரம் தாளாமல் உன்னை எப்போது பார்க்க வரலாம் என கேட்டார். கார்த்திகை மாதத்தில் துவங்கி 41 நாள் விரதமிருந்து மலைகளை தாண்டி வந்தால் என்னை காணலாம் என்றார்.

   

காட்டிற்கு புறப்பட்ட மணிகண்டன் மகிஷியை அழித்தபின் அவளுக்கு சாபம் நீங்கி மீண்டும் மஞ்சமாதாவாக மாறினாள். மஞ்சமாதா ஐயப்பனிடம் தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டாள். ஆனால் ஐயப்பன் தான் ஒரு பிரம்மச்சாரி என்றும் பிரம்மச்சரிய விரதம் இருந்து தன்னை தரிசிக்க வருபவர்களை மட்டுமே தான் குடிகொண்டிருக்கும் இடத்திற்குள் அனுமதிக்க முடியும் என்றும் கூறிவிட்டார். பிடிவாதம் பிடித்த மங்சமாதா தான் ஐயப்பன் அருகிலேயே இருப்பதாக கூறினாள். வேறு வழியின்றி ஐயப்பன் தனது இடப்பக்கத்தில் மஞ்சமாதா அமர இடம் கொடுத்தார் என்றுதான் நமக்கு திருமணம் நடக்கும் என்று மஞ்சமாதா கேட்க, என்று பிரம்மச்சரியம் பூணாமல் பக்தர்கள் தனது இடத்திற்கு வருகிறார்களோ அந்த நாளில உன்னைத் திருமணம் செய்து கொள்கிறேன் என ஐயப்பன் கூறிவிட்டார்.

   

அன்றுமுதல் இன்றுவரை கன்னி ஐயப்பன்மார்களை மஞ்சமாதா கடும் சோதனை கொடுத்து துன்புறுத்தி வருகிறாள். கெட்ட கனவுகள் மூலம் திருமணபாக்கியத்தை பலருக்கும் கொடுத்து வருகிறோள். இருந்தாலும் விடாக்கண்டர்களான பக்தர்களும் கடும் விரதமிருந்து பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடித்து பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடித்து, இன்றுவரை ஐயப்பனை காண செல்கிறார்கள். நீண்டகாலமாக திருமணம் முடியாத ஆண்கள் மாளிகைபுரம் என்று அழைக்கப்படும் மஞ்சமாதாவை வணங்கினால் திருமண பாக்கியம் கிட்டும்.

 

ஐயப்பனுக்கு சாஸ்தா என ஏன் பெயர் வந்தது?

 

சாஸ்தா என்ற சொல் தற்போது தென்மாவட்ட மக்களால் சாத்தா என்று அழைக்கப்படுகிறது. சாத்து என்றால் கூட்டம் என பொருள். ஐயப்பன் கோயிலுக்கு வருபவர்கள் தனித்து வர முடியாது. கூட்டமாகத்தான் வரமுடியும். கூட்டமாக வந்து வணங்குவதால் இவர் சாஸ்தா என அழைக்கப்பட்டார்.

   

ஒரு காலத்தில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 60 முதல் 70 பேர் வரை மட்டுமே சென்றார்கள். இப்போது செல்வதைப் போல லட்சக்கணக்கில் பக்தர்கள் அங்கு சென்றதில்லை. அப்படி செல்லும்போது கோடரி, ஈட்டி முதலிய ஆயுதங்களை எடுத்துச் செல்வார்கள்.

   

அப்படி சென்றாலும்கூட மிருகங்களிடம் சிக்கி பலரும் இறந்துவிடுவதுண்டு. 15 பேர்தான் திரும்பி வருவார்கள். அப்படி திரும்பி வருபவர்களை பக்தியுடன் ஏற்று குருசாமியாக கொள்ளும் வழக்கம் பழங்காலத்தில் ஏற்பட்டது.

   

இப்போதும் ஐயப்ப சுவாமிகளுக்கு தலைமை ஏற்று செல்பவரை குருசாமி என்றுதான் அழைக்கிறார்கள்.

 

நெய் கொண்டு செல்வது ஏன்?

 

ஐயப்பனுக்கு காணிக்கையாய் கொடுக்க நெய் கொண்டு செல்வது காலம் காலமாய் இருந்து வருகிறது. இந்த வழக்கம் ஏன் ஏற்பட்டது தெரியுமா?

   

ஐயப்பனின் வளர்ப்புத் தந்தை பந்தளமகாராஜா ராஜசேகரன் ஐயப்பனை விட்டு பிரிந்து செல்லும் காலம் வந்தது. ஐயப்பன் பிரியும் நேரத்தில் மணிகண்டா, நீ காட்டுக்குள் குடியிருக்கப் போவதாய் சொல்கிறாய். அங்கே மலைகளைக் கடந்து வரவேண்டும். அவை சாதாரண மலையல்ல. வயதான நான் உன்னைக் காண எப்படி வருவேன் என்றார்.

   

அதற்கு மணிகண்டன் உங்களுக்கு ஒரு கருடன் வழிகாட்டும். அந்த வழிகாட்டுதலின்படி நீங்கள் எனது இடத்திற்கு வந்து விடலாம் என அருள்பாலித்தார். அதன்படி ஆண்டுக்கு ஒருமுறை ஐயப்பனைக் காண பந்தளராஜா மலைக்குச் செல்வார்.மகனை வெறுங்கையோடா பார்க்கச் செல்ல முடியும். அவனுக்கு பிடித்தமானவற்றை எல்லாம் எடுத்துச் செல்ல வேண்டாமா? என்ன கொண்டு செல்வது என யோசித்தார். நெய் இலகுவில் கெட்டு போகாத ஒன்று.

   

எனவே நெய்யில் செய்த பலகாரங்களை கொண்டு செல்வார். மேலும் தனி நெய்யை தேங்காய்க்குள் ஊற்றி கொண்டு சென்றால் இன்னும் பல நாள் கெடாமல் இருக்கும். ஐயப்பனைக் காணப் செல்வதென்றால் எளிதான காரியமா? இன்று போல அன்று பஸ், ரயிலெல்லாம் கிடையாதே! எனவே பந்தளத்திலிருந்து நடந்தே மலை ஏறுவார். மலையை அடைய பல நாட்களாகும்.எனவே கெட்டுப் போகாத நெய்யை எடுத்துச் செல்லும் வழக்கம் உருவானது. இருமுடிகட்டில் முக்கியமானது நெய் தேங்காய்தான். அத்துடன் ஐயப்பன் அரண்மனையில் இருந்த போது அணிந்த நகைகளையும் எடுத்துச் சென்ற பழக்கம் நாளடைவில் உருவானது. அது இப்போது பெரும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. அன்று கருடன் வழிகாட்டுவது விசேஷ அம்சம். வயதான அவர் மலை ஏற முடியாமல் ஐயோ அப்பா என்று சொல்லியபடியே பல இடங்களில் உட்கார்ந்தும் விடுவார். இந்தச் சொற்களே திரிந்து ஐயப்பன் என ஆனதாகவும் சொல்லப்படுவதுண்டு.

 

ஐயப்பனின் முதல் தலம்

 

மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை, பிரம்மாந்திரம் என்ற 7 வகை நிலையைப் பற்றி பலரும் அறிந்திருக்க நியாயமில்லை. ஒரு மனிதனை எடுத்துக் கொண்டால் அவனது மூலாதாரம்... கால்கள்.. சுவாதிஷ்டானம் இடுப்பு, மணிபூரகம் - வயிறு, அனாகதம்- பிறப்புறுப்பு, விசுத்தி - மனம், ஆக்ஞை - பிடரி, பிரம்மாந்திரம் - தலை ஆக 7 வகை நிலையில் மனிதனின் உடலமைப்பு உள்ளது. சிவனை எடுத்தக் கொண்டால் அவரது மூலாதாரம் - திருவாரூர். சுவாதிஷ்டானம் - திருவானைக்காவல், மணிபூரகம் - திருவண்ணாமலை, அனாகதம் - சிதம்பரம், விசுத்தி - காளத்தி, ஆக்ஞை - காசி, பிரம்மாந்திரம் - கைலாசம்.

   

அதுபோல தர்மசாஸ்தா எனப்படும் ஐயப்பனுக்கு மூலாதாரம் - பாபநாசம் சொரிமுத்தையன் கோயில். சுவாதிஷ்டானம் - அச்சன் கோயில், மணிபூரகம் - ஆரியங்காவு, அனாகதம் - குளத்துப்புழை, விசுத்தி - பந்தளம், ஆக்ஞை - சபரிமலை, பிரம்மாந்திரம் - காந்தமலை. இந்த வகையில் சபரிமலை சாஸ்தாவுக்கு முதல் முதலில் கோயில் தோன்றியதாக கூறப்படுவது பாபாநசத்திலுள்ள சொரிமுத்தையனார் கோயில் ஆகும்.

   

தர்ம சாஸ்தாவான ஐயப்பனே இங்கு சொரிமுத்தைய்யனார் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். இங்கு செல்வது முன்னொரு காலத்தில் மிகவும் கடினமானதாக இருந்தது. பொதிகை மலைக்காடுகளில், வனவிலங்குகள் ஏராளமாக வசிக்கும் காட்டுப்பகுதியில் தாமிரபரணி ஆற்றின் நடுவே இந்தக் கோயில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆடி அமாவாசை அன்று இங்கு நடக்கும் விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள்.தாமிரபரணியில் நீராடி இந்த ஐயனை வழிபட்டால் எப்படிப்பட்ட பாவமும் விலகும் என்பது ஐதீகம். இதுகோயில் மட்டுமல்ல. மிகச்சிறந்த சுற்றுலாத்தலமும் ஆகும்.

 
முதல் பக்கம்
வாசகர் கடிதம் International Edition Font Help ? Advertisment Tariff

Dinamalar Publications
Copyright 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division,Dinamalar  
coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in